கோலி மற்றும் சச்சினை ஓரம் கட்டினார் ஹசிம் அம்லா!! 1
KIMBERLEY, SOUTH AFRICA - OCTOBER 15: Hashim Amla(L) congratulating Quinton de Kock of South Africa on his 50 runs during the 1st Momentum ODI match between South Africa and Bangladesh at Diamond Oval on October 15, 2017 in Kimberley, South Africa. (Photo by Frikkie Kapp/Gallo Images/Getty Images)

தென்னாப்பிரிக்க மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தென்னப்பிரிக்காவின் கிம்பெர்லியில் நடந்தது. இந்த போட்டியில் தான் தென்னப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹசிம் அம்லா சச்சின் மற்றும் விராட் கோலியின் சாதனையை முறியத்தார்.கோலி மற்றும் சச்சினை ஓரம் கட்டினார் ஹசிம் அம்லா!! 2

குறந்த போட்டிகள் 26 ஒருநாள் சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியளில் தென்னாப்பிரிக்கவின் ஹசிம் அம்லா முதலிடம் பிடித்துள்ளார். இந்த சாதனையை அம்லா 154 ஒருநாள் ஆட்டங்களில் செய்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்ததே சாதனையாக இருந்தது.

குறைந்த ஆட்டங்களில் 26 சதங்கள் கடந்த வீரர்கள் பட்டியள் :

  1. ஹசிம் அம்லா* (தென்) – 154 ஆட்டங்கள்
  2. விராட் கோலி* ( இந்தியா) – 166 ஆட்டங்கள்
  3. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) – 247 ஆட்டங்கள்
  4. ரிக்கி பாண்டிங் (ஆஸி) – 286 ஆட்டங்கள்
  5. சனத் ஜயசூரியா (இலங்கை) – 402 ஆட்டங்கள்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 278 ரன் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்பிகுர் ரகிம் 116 பந்துகளுக்கு 110 ரன் அடித்தார். இந்த ஆட்டத்தில் 11 ஃபோர்களும் 2 சிக்சர்களும் அடங்கும்.கோலி மற்றும் சச்சினை ஓரம் கட்டினார் ஹசிம் அம்லா!! 3

தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளே ககிசோ ரபடா 10 ஓவர்களுக்கு 43 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் சற்று கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா மற்றும் குவிண்டன் டீ காக் வங்கதேச அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

இவரும் சேர்ந்து துவக்க ஆட்டத்திலேயே போட்டியை முடித்துவிட்டனர்.     42.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட விடாமல் 282 ரன் குவித்து வங்கதேச அணியை மண்ணைக் கவ்வ செய்தனர்.

விக்கெட் கீப்பர் குவிண்டன் டீ காக் 145 பந்துகளுக்கு 168 ரன் குவித்தார், இந்த ஆட்டத்தில் 21 ஃபோர்களும் 2 சிக்சர்களும், ஹசிம் அம்லா 112 பந்துகளுக்கு 110 ரன்னும் விளாசினர். இவருடைய இந்த சதத்தில் 8 ஃபோர்களும் அடங்கும்.

கோலி மற்றும் சச்சினை ஓரம் கட்டினார் ஹசிம் அம்லா!! 4
KIMBERLEY, SOUTH AFRICA – OCTOBER 15: Hashim Amla(L) congratulating Quinton de Kock of South Africa on his 50 runs during the 1st Momentum ODI match between South Africa and Bangladesh at Diamond Oval on October 15, 2017 in Kimberley, South Africa. (Photo by Frikkie Kapp/Gallo Images/Getty Images)

வங்கதேச அணி ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மொசமாக இழந்திருக்கிறது. இந்த சுற்றுப்பயனத்தில் இன்னும் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் இருக்கிறது. ‘கைப்புள்ள’ மாட்டிவிட்டான் என வச்சு செய்து கொண்டிருக்கிரது தென்னாப்பிரிக்க அணி.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *