Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images)

ஆப்கான் அணியில் இந்த உலகக்கோப்பையில் பவுலர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒரு தொடக்க வீரர் இருக்கிறார், அவர்தான் ஹஸ்ரதுல்லா சஸாய். இவர் முன்பு ஒருமுறை ஒருநாள் கிரிக்கெட்டில் 30 ஓவர்கள் தான் நின்றால் இரட்டைச் சதம் அடிப்பேன் என்று சூளுரைத்த அதி தன்னம்பிக்கை அதிரடி வீரர் ஆவார்.

ஜெயசூரியா, ஆடம் கில்கிறிஸ்ட் போன்று இவர் பெரிய அச்சுறுத்தலாக வளர வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பிரிஸ்டலில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 262 ரன்களுக்கு மட்டுப்படுத்திய ஆப்கான் அணி தொடர்ந்து இலக்கை விரட்டி வருகிறது. 15 ஓவர்களில் 92/1 என்று மிரட்டி வருகிறது.

மொகமது ஷஸாத்தும் அதிரடி வீரர்தான், ஆனால் சஸாய் வேறு ஒருரகம், இடது கை வீரரான இவர் இந்த உலகக்கோப்பையில் பெரிய அச்சுறுத்தல்தான். இலக்கை விரட்டும் போது ஒரு முனையில் ஷஸாத், மொகமது ஆமீரை 2 பவுண்டரிகளையும் ஷாஹின் ஷா அப்ரீடியை 1 பவுண்டரியும் அடிக்க, 4வது ஓவரில் ஷாஹின் ஷா அஃப்ரீடி பவுலிங் வீச வந்தார்.

எதிர்கொண்டது இளம் புயல் ஹஸ்ரதுல்லா சஸாய், முதல் பந்து ஷார்ட் பிட்ச், போடாதே என்று மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார். பிறகு ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்தை மிட்விக்கெட்டில் அடுத்த பவுண்டரி. இருவரும் முறைப்பைப் பரிமாறிக் கொண்டனர். பிறகு ஸ்லோ பந்து மிட் ஆன் மிட்விக்கெட் இடையே பவுண்டரி.

அடுத்த பந்து நல்ல பவுன்சர், ஷாஹின் ஷா அஃப்ரீடி அருகில் வந்து சில வார்த்தைகளை முணுமுணுத்தார், காரணம் பந்தை அமைதியாக ஆடாமல் விட்ட சஸாய், அப்ரிடியை ’போய் பந்து வீசு’ என்பது போல் செய்கை செய்தார். அடுத்த பந்து ஸ்கொயர் லெக்கில் காணாமல் போக கடைசி பந்து ஒரு சேஞ்சுக்காக எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி ஆனது. 5 பவுண்டரிகள்.Afghanistan's Hazratullah Zazai (L) waves away bowler Pakistan's Shaheen Shah Afridi after hitting another shot for four runs during the 2019 Cricket World Cup warm up match between Pakistan and Afghanistan at Bristol County Ground in Bristol, southwest England, on May 24, 2019. (Photo by Glyn KIRK / AFP) (Photo credit should read GLYN KIRK/AFP/Getty Images) இப்போது பவுன்சர் போடு என்பது போல் ஏதோ சொல்ல ஷாஹின் ஷா அஃப்ரீடி கடுப்பாக வாக்குவாதம் வரும் சமயத்தில் நடுவர் தலையிட்டு பிரச்சினையை சமாதானம் செய்தார். உலகக்கோப்பை போட்டிகள் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரே ஓவரில் 5 பவுண்டரி, சிறு வாக்குவாதம், ஒரு சரியான சவால்.. நடுவர் தலையீடு என்று தொடங்கியுள்ளது.

இந்த ஓவர் மட்டுமல்லாது ஷேன் வாட்சனையே 2015-ல் ஆட்டிப்படைத்த வஹாப் ரியாஸையும் 2 புல் ஷாட் சிக்ஸ், ஒரு நேர் பவுண்டரி என்று விளாசி 27 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர் என்று 49 ரன்கள் எடுத்து பிரமாதமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததோடு பாகிஸ்தானின் பிரைம் பவுலரையே ஒரு கை பார்த்து விட்டார் சஸாய்.

அப்ரீடி 3 ஓவர்களில் 34 ரன்கள் விளாசப்பட்டார் இதில் 8 பவுண்டரிகளை அவர் விட்டுக் கொடுத்தார்.



  • SHARE

    விவரம் காண

    கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

    கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

    அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

    அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

    இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

    தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

    ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

    ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...