கிளன் மேக்ஸ்வெல்
அவருக்கு நிகர் அவர் மட்டும் தான்… யாரும் நெருங்க கூட முடியாது; இந்திய வீரரை மனதார புகழ்ந்து பேசிய கிளன் மேக்ஸ்வெல்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வரும் சூர்யகுமார் யாதவை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளன் மேக்ஸ்வெல் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.

அவருக்கு நிகர் அவர் மட்டும் தான்... யாரும் நெருங்க கூட முடியாது; இந்திய வீரரை மனதார புகழ்ந்து பேசிய கிளன் மேக்ஸ்வெல் !! 1

ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.

நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரிலும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒரு சதமும் அடித்தார்.

சூர்யகுமார் யாதவ்

எதிரணி வீரர்கள் கூட சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை வியந்து பாராட்டி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிளன் மேக்ஸ்வெல்லும் தன் பங்கிற்கு சூர்யகுமார் யாதவை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்

சூர்யகுமார் யாதவ் குறித்து கிளன் மேக்ஸ்வெல் பேசுகையில், “நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் விளையாட்டை பார்த்து மிரண்டு போனேன். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டை ஆரோன் பின்ச்சிற்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பினேன், அதில் என்ன நடக்கிறது? இவர் வேறு ஒரு கிரகத்தில் பேட்டிங் செய்கிறார்! எல்லோருடைய ஸ்கோரையும் பாருங்கள். இவர் 50 பந்தில் அடித்திருக்கும் ரன்களையும் பாருங்கள் என கூறினேன். போட்டி முடிந்த அடுத்த தினமும் நான் போட்டியின் ஹைலைட்ஸை முழுவதுமாக பார்த்தேன். அவர் அடித்த பல ஷாட்களை யாரும் அடிக்கவே முடியாது. சொல்லப்போனால், சில ஷாட்களை பார்ப்பது கூட கடினமாக இருந்தது, அவருக்கு நிகர் அவர் மட்டும் தான்” என மனதார பாராட்டி பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *