இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

இதன் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில்  இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.  

ஜடேஜாவிற்கு இணையான வீரர் கிடைச்சாச்சு ; சூப்பரா விளையாடுறாரு ! 2

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இந்த இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் இந்திய அணியில் ஜடேவுக்கு பதிலாக யார் விளையாடுவார் என்று எண்ணிக்கொண்ட போது விராட் கோலி அக்சர் பட்டேலை களமிறக்கினார். ஆனால் அக்சர் பட்டேலுக்கு டெஸ்ட் போட்டியில் அதிக அனுபவ இல்லை என்று பலர் எதிர்ப்பு தெறிவித்தனர்.

ஜடேஜாவிற்கு இணையான வீரர் கிடைச்சாச்சு ; சூப்பரா விளையாடுறாரு ! 3

அக்சர் பட்டேல் இந்த போட்டியின் மூலம் தன்னை முழுமையாக நிருபித்துள்ளார். இந்த போட்டியில் பட்டேல் 11 விக்கெட்களை வீழத்தியிருக்கிறார். இங்கிலாந்து பேட்ஸ்மன்கள் அனைவரும் பட்டேல் பந்துவீச்சை எதிர்கொள்ள திணறி வந்தார்கள். இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜாவின் இடத்தை தற்போது அக்சர் பட்டேல் பூர்த்தி செய்து வருகிறார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் அக்சர் பட்டேலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *