யாராலயும் அதை செய்ய முடியாது... சஞ்சு சாம்சனின் சொதப்பல் பேட்டிங்கிற்கு இதுவே காரணம்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 1

இந்த ஒரு விஷயத்தை சஞ்சு சாம்சன் செய்தாலே அவரை யாரும் குறை சொல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதி சுற்று வரை முன்னேற்றி சென்ற அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவர் விளையாடவில்லை.

யாராலயும் அதை செய்ய முடியாது... சஞ்சு சாம்சனின் சொதப்பல் பேட்டிங்கிற்கு இதுவே காரணம்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 2

சஞ்சு இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 458 ரன்கள் அடித்துள்ளார், ஓரிரு போட்டிகளை தவிர ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இவருடைய பங்களிப்பு அந்த அளவிற்கு இல்லை.

அதேபோன்று சர்வதேச போட்டிகளிலும் இவர் மிக மோசமான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கு இந்திய அணி வாய்ப்பு கொடுத்த போதும் அதை அனைத்தையுமே வீனடித்துள்ளார்.

இவர் கடைசியாக இந்திய அணிக்கு 13 டி20 போட்டிகளில் பங்கேற்று, வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் காரணமாக இவர் இந்திய அணியிலிருந்து நீண்டகாலமாக புறக்கணிப்பட்டு வந்தார்.

யாராலயும் அதை செய்ய முடியாது... சஞ்சு சாம்சனின் சொதப்பல் பேட்டிங்கிற்கு இதுவே காரணம்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 3

இந்த நிலையில் இவருக்கு மீண்டும் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.

மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன் தவறு செய்யாமல் விளையாட வேண்டும் அப்படி செய்தால் அவருடைய கிரிக்கெட் எதிர்காலம் முடிந்துவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சஞ்சு சாம்சனுக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது,இதனால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

யாராலயும் அதை செய்ய முடியாது... சஞ்சு சாம்சனின் சொதப்பல் பேட்டிங்கிற்கு இதுவே காரணம்; சுனில் கவாஸ்கர் சொல்கிறார் !! 4

சஞ்சு சாம்சன் குறித்தது கவாஸ்கர் பேசுகையில்,“அனைவருக்கும் அதிகமான வாய்ப்பு கொடுக்க வேண்டும், ஆனால் சஞ்சு சாம்சன் மிக அதிகமான வாய்ப்பை பெற்றுள்ளார். ஏன் சஞ்சு சாம்சனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றால்,அவருடைய அதிரடியான ஆட்டம் ஆணைவருக்கும் தெரியும்,ஆனால் அவர் இந்திய அணியில் விளையாட ஆரம்பித்தால் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடுவார்.ஆனால் அது உங்களுக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு, உங்கள் கண்ணை திறந்து பிட்ச்சின் நிலை அறிந்து விளையாட வேண்டும்,அவருடைய ஷாட் செலக்சன் இன்னும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் நிலையாக விளையாட ஆரம்பிப்பார்,இந்த ஒரு விஷயத்தை செய்தால் இந்திய அணியாக இருந்தாலும் சரி.. ராஜஸ்தான் அணியாக இருந்தாலும் சரி… அவர் சிறப்பாக விளையாட ஆரம்பிப்பார்.பின் அவர் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதை யாராலும் குறை சொல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.