முகமது கைஃப்
இப்படி எல்லாம் இருந்தா வேலைக்கு ஆகாது தம்பி… முதல்ல உங்கள காப்பாத்திக்கங்க
; தீபக் ஹூடாவிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முகமது கைஃப்

இந்திய அணியின் மூன்றாவது இடத்தில் களமிறங்க சூர்யகுமார் யாதவ் தான் சரியானவர் என்று பேசிய தீபக் ஹூடாவை முன்னாள் வீரர் முகமது கைஃப் பதில் கொடுத்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இப்படி எல்லாம் இருந்தா வேலைக்கு ஆகாது தம்பி... முதல்ல உங்கள காப்பாத்திக்கங்க; தீபக் ஹூடாவிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முகமது கைஃப் !! 1

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டீவன் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இப்படி எல்லாம் இருந்தா வேலைக்கு ஆகாது தம்பி... முதல்ல உங்கள காப்பாத்திக்கங்க; தீபக் ஹூடாவிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முகமது கைஃப் !! 2

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி.20 தொடரை கைப்பற்றியது.

இப்படி எல்லாம் இருந்தா வேலைக்கு ஆகாது தம்பி... முதல்ல உங்கள காப்பாத்திக்கங்க; தீபக் ஹூடாவிற்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த முகமது கைஃப் !! 3

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த வெற்றி குறித்து பேசிய தீபக் ஹூடா, தான் ஐந்தாவது இடத்தில் களமிறங்கவே விரும்புவதாகவும், லெஜண்ட் சூர்யகுமார் யாதவ் தான் மூன்றாவது இடத்தில் களமிறங்க சரியானவர் என பேசியிருந்த நிலையில், இதற்கு முன்னாள் வீரரான முகமது கைஃப் சரியான பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

தீபக் ஹூடா

இது குறித்து முகமது கைஃப் பேசுகையில், “ஐந்தாவது இடத்தில் விளையாட விரும்புகிறேன் என ஒரு வீரர் கூறுவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் கே.எல் ராகுலின் இடத்தில் விளையாட விரும்புகிறேன், துவக்க வீரராக விளையாட விரும்புகிறேன், விராட் கோலி விளையாடும் மூன்றாவது இடத்தில் களமிறங்க விரும்புகிறேன் என தைரியமாக பேசுவதே ஒரு விளையாட்டு வீரருக்கு அழகு, இதுவே அவர்களுக்கு உத்வேகத்தையும் புத்துணர்ச்சியையும் கொடுக்கும். நமக்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலையுடன் இருந்தால் எந்த பிரயோஜனும் இருக்காது, போட்டி மணப்பான்மை விளையாட்டிற்கு நிச்சயம் தேவை. எனவே தீபக் ஹூடா இது போன்ற மனநிலையை மாற்றி கொண்டு தன்னை முன்னேற்றி கொள்வது மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.