தொடர் நாயகன் பட்டத்தை பெற்ற ஆஸ்திரேலிய வீரரின் அதிரடி பேட்டி இதோ ! 1

தொடர் நாயகன் பட்டத்தை வாங்கிய ஆஸ்திரேலிய வீரரின் அதிரடி பேட்டி இதோ ! 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதன் பின் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை சமநிலை ஆக்கியது. 

இந்திய அணியை வெற்றி பெற வைத்த ரிஷப் பண்ட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய விருது ! 2

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் விடாமுயற்சியால் ட்ரா ஆனது. இதன்பின் இன்று நடைபெற்ற இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 369 ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 336 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வைத்து தனது இரண்டாவது இன்னிங்சில் 294 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் தேவைப்பட்டது. 

இந்திய அணியை வெற்றி பெற வைத்த ரிஷப் பண்ட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய விருது ! 3

மிகப்பெரிய இலக்காக இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதில் புஜாரா 56, ரிஷப் பண்ட் 89 மற்றும் சுப்மன் கில் 91 ரன்கள் குவித்து சிறப்பாக விளையாடி இருக்கின்றனர். இதன் மூலம் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைபற்றி அசத்தியுள்ளது.

இதன் மூலம் பிரிஸ்பேன் மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக எந்த அணியாலும் வீழ்த்த முடியாத ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி தோற்கடித்து சாதனை படைத்துள்ளது.  இந்திய அணியின் இந்த வெற்றி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகிறது.

தொடர் நாயகன் பட்டத்தை பெற்ற ஆஸ்திரேலிய வீரரின் அதிரடி பேட்டி இதோ ! 2

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரான பாட் கம்மின்ஸ் இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 21 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதில் 3 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் காரணமாக தொடர் நாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இதன்பின் பேட்டியளித்த பாட் கம்மின்ஸ் “இன்றைய டெஸ்ட் போட்டி எங்களுக்கு மோசமாக இருந்தது. ரிஷப் பண்ட் மற்றும் மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். நான் அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த கடுமையாக போராடினேன். ஒருவேளை நாங்கள் நன்றாக பந்து வீசி இருந்தால் விக்கெட்களை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். எனவே தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”  என்று கூறியுள்ளார் பாட் கம்மின்ஸ்.

தொடர் நாயகன் பட்டத்தை பெற்ற ஆஸ்திரேலிய வீரரின் அதிரடி பேட்டி இதோ ! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *