இந்த பையன தவற வேற யாரும் செட் ஆக மாட்டாங்க... பும்ராஹ்விற்கு பதிலாக இவரை எடுங்கள்; புது ஐடியா கொடுக்கும் சேன் வாட்சன் !! 1

காயம் காரணமாக ஜஸ்ப்ரிட் பும்ராஹ் எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பும்ராஹ்விற்கு மாற்றாக யாரை எடுக்கலாம் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேன் வாட்சன் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 16ம் தேதி துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடருக்காக இந்திய அணி அடுத்த சில தினங்களில் ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. கடந்த டி.20 உலகக்கோப்பை தொடரை போலவே இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

இந்த பையன தவற வேற யாரும் செட் ஆக மாட்டாங்க... பும்ராஹ்விற்கு பதிலாக இவரை எடுங்கள்; புது ஐடியா கொடுக்கும் சேன் வாட்சன் !! 2

வலுவான அணியாக இருந்த போதிலும், இந்திய அணி கடந்த டி.20 உலகக்கோப்பை தொடர் மற்றும் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை என இரு பெரிய தொடரிலும் இறுதி போட்டிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் எதிர்வரும் டி 20 தொடருக்கான இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியின் மிக முக்கிய வீரரான பும்ராஹ் காயத்தால் டி.20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக யாரை எடுக்கலாம் என்பது குறித்தான தங்களது கருத்துக்களையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த பையன தவற வேற யாரும் செட் ஆக மாட்டாங்க... பும்ராஹ்விற்கு பதிலாக இவரை எடுங்கள்; புது ஐடியா கொடுக்கும் சேன் வாட்சன் !! 3

பெரும்பாலான முன்னாள் வீரர்கள் பும்ராஹ்விற்கு பதிலாக முகமது ஷமி அல்லது தீபக் சாஹருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பேசி வரும் நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான சேன் வாட்சனோ, முகமது சிராஜால் மட்டுமே பும்ராஹ்வின் இடத்தை ஓரளவிற்கு சரி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

இந்த பையன தவற வேற யாரும் செட் ஆக மாட்டாங்க... பும்ராஹ்விற்கு பதிலாக இவரை எடுங்கள்; புது ஐடியா கொடுக்கும் சேன் வாட்சன் !! 4

இது குறித்து சேன் வாட்சன் பேசுகையில், “இந்திய அணியில் பும்ராஹ்வின் இடத்தை சரி செய்வது சாதரண விசயம் அல்ல, அவருக்கான மாற்றான வீரர்கள் கிடைப்பதே அரிது. ஆனால் தற்போதைய இந்திய அணியில் பும்ராஹ்வின் இடத்தை முகமது சிராஜால் மட்டுமே ஓரளவிற்கு சரி செய்ய முடியும் என நான் கருதுகிறேன். என்னை பொறுத்தமட்டில் அவருக்கு சரியான மாற்று வீரர் முகமது சிராஜ் தான். பும்ராவிடம் இருக்கும் அதே ஃபயர்பவர் சிராஜிடமும் இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும். சிராஜ் புதிய பந்தில் அருமையாக வீசக்கூடியவர். நல்ல வேகமாகவும், அதேவேளையில் ஸ்விங் செய்தும் வீசக்கூடியவர். ரன்கள் கொடுக்காமல் வீசுவதுடன் விக்கெட்டும் வீழ்த்துவதில் முகமது சிராஜ் வல்லவர்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.