டி.20 உலகக்கோப்பையில் இந்த இரண்டு பேருக்கும் இடம் உறுதி... முன்னாள் வீரர் ஆரூடம் !! 1

எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் இந்த இரண்டு சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணியை கட்டமைக்க வேண்டாமென்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கடந்த டி.20 உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, படு மோசமான தோல்விகளால் லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறியது. இதனால் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் பிசிசிஐ., பெரும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த தொடரில் செய்த தவறுகளை மீண்டும் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, சீனியர் வீரர்களை விட சமீபகாலமாக இளம் வீரர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கி வருகிறது.

டி.20 உலகக்கோப்பையில் இந்த இரண்டு பேருக்கும் இடம் உறுதி... முன்னாள் வீரர் ஆரூடம் !! 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால், முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த அனுபவம் வாய்ந்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இரண்டு வீரர்கள் இல்லாமல் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைக்க முடியாது என்று தென் ஆப்பிரிக்க அணியின் சேர்ந்த முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

டி.20 உலகக்கோப்பையில் இந்த இரண்டு பேருக்கும் இடம் உறுதி... முன்னாள் வீரர் ஆரூடம் !! 3

இதுகுறித்து கிரீம் ஸ்மித் பேசுகையில், “இன்னும் இரண்டு மாத கால இடைவேளையில் என்னவேண்டுமென்றாலும் நடக்கலாம், ஆனால் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியாவை உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்க வேண்டும், பினிஷிங்கில் தினேஷ் கார்த்திக்கின் அனுபவமும் மற்றும் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து அவர் விளையாடும் பர்ட்னர்ஷிப்பும் போட்டியின் தன்மையே மாற்றிவிடுகிறது, தினேஷ் கார்த்திக் மனதளவில் மிகவும் உறுதியாக உள்ளார் அதேபோன்று ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமை இந்திய அணிக்கு மிகவும் தேவைப்படுகிறது, மேலும் இந்த கூட்டணியுடன் ஜடேஜாவும் இணைந்துவிட்டால் இவர்கள் மூவரையும் இந்திய அணி சிறப்பாக பயன்படுத்தலாம், என்னைப்பொறுத்தவரையில் ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பே தெரியவில்லை ”என்று கிரேம் ஸ்மித் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.