தாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா..?

தோனியின் கேப்டன்சி திறன், பேட்டிங் – விக்கெட் கீப்பிங் திறன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு நகைச்சுவை உணர்வு, சமயோசித மற்றும் சாமர்த்தியமான யோசனைகள், சிந்தனைகளுக்கும் பெயர்போனவர் தோனி.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனி, மூன்று விதமான சர்வதேச கோப்பைகளையும் இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர்.

கேப்டன்சியிலிருந்து விலகி தற்போது விராட் கோலி தலைமையிலான அணியில் சீனியர் வீரராக ஆடிவருகிறார். தோனி கேப்டனாக இல்லையென்றாலும் நெருக்கடியான நிலைகளிலும் முக்கியமான தருணங்களிலும் அவரது ஆலோசனையின் படிதான் அணி செயல்படுகிறது.

தோனியின் கேப்டன்சி திறன், பேட்டிங் – விக்கெட் கீப்பிங் திறன் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு நகைச்சுவை உணர்வு, சமயோசித மற்றும் சாமர்த்தியமான யோசனைகள், சிந்தனைகளுக்கும் பெயர்போனவர் தோனி. பலமுறை அவரது சாமர்த்தியமான பேச்சை பார்த்திருக்கிறோம்.

தோனி கேப்டனாக இருந்தபோது, அப்படியான ஒரு சமயோசித யோசனையை அவர் தெரிவித்தது குறித்துத்தான் பார்க்கப்போகிறோம். இந்திய அணியின் முன்னாள் மனவள பயிற்சியாளர் பாடி அப்டன், ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில் தோனி கூறிய சமயோசித யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாடி அப்டன் மனவள பயிற்சியாளராக வந்த சமயத்தில், கும்ப்ளே டெஸ்ட் அணியின் கேப்டனாகவும், தோனி ஒருநாள் அணியின் கேப்டனாகவும் இருந்தனர். அப்போது, வீரர்கள் பயிற்சிக்கும் ஆலோசனை கூட்டத்திற்கும் தாமதமாக வருவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தாமதமாக வரும் வீரர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என கேப்டன்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணியின் கேப்டனான கும்ப்ளே, தாமதமாக வரும் வீரர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் என்று பரிந்துரைத்தார். ஒருநாள் அணியின் கேப்டன் தோனி, ஒரு வீரர் தாமதமாக வந்தாலும் அனைத்து வீரர்களும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்பின்னர் ஒருநாள் அணி வீரர் ஒருவர் கூட தாமதமாக வரவில்லை என்று பாடி அப்டன் தெரிவித்துள்ளார்.

ஒரு அணியாக ஆடும் விளையாட்டுகளில் வீரர்கள் நல்ல டீம் பிளேயராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்களை டீம் பிளேயர்களாக உருவாக்க வேண்டும். அந்த வகையில் தோனியின் யோசனை அபாரமானது. ஏனெனில் நம்மால் மற்றவர் பாதிக்கப்படக்கூடாது என்ற சிந்தனை ஒவ்வொரு வீரருக்கும் வரும். அதனால் தாமதமாக வருவது தடுக்கப்படும். அதற்காகத்தான் தோனி இப்படியான ஒரு தண்டனையை அறிவித்திருக்கிறார். அதற்கு பலன் கிடைத்தது சிறந்த விஷயம். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...