ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு !! 1
ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு

ஐ.பி.எல் டி.20 தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்காக நடத்தப்படும் ஏலம் அவமானகரமானது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு !! 2

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதில் ஓவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்ட நிலையில், மற்ற வீரர்களுக்கான ஏலம் பெங்களூரில்   நடைபெற்றது.

ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு !! 3

 

இதில் நியூசிலாந்தில் இருந்து மொத்தம் 24 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர், ஆனால் வெறும் 7 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டனர். மார்டின் கப்தில், இஷ் சோதி போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை.

இந்நிலையில் வீரர்களுக்காக நடத்தப்படும் ஏலம், அவமானகரமானது என்று நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.பி.எல் ஏலம் கேவலமானது…. நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் குற்றச்சாட்டு !! 4

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் ஹீத் மில்ஸ் கூறும் போது ஐ.பி.எல் தொடருக்காக வீரர்கள் ஏலம் விடும் முறை மிக  கொடூரமானது மற்றும் கண்ணியமற்றது.  விளையாட்டு வீரர்களின் வாழ்வாதாரங்களுடன் விளையாட  இது  ஒரு முறையற்ற வழி என்று கூறினார். வீரர்கள் ஒன்றும் கால்நடைகள் அல்ல, இது வீரர்களுக்கு அவமானத்தையே தரும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *