இந்த செயலால் நான் மிகப் பெரும் கவலை அடைந்தேன்; இறுதியாக மனம் திறந்த சூர்யகுமார் யாதவ் !! 1


இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ம் தேதி துவங்கி 28ம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி துவங்கி 8ம் தேதியும் நிறைவடைய உள்ளது. இதன்பிறகு இரு அணிகள் இடையேயான ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடர் துவங்க உள்ளது, இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 12ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த செயலால் நான் மிகப் பெரும் கவலை அடைந்தேன்; இறுதியாக மனம் திறந்த சூர்யகுமார் யாதவ் !! 2இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் பலரும் ஆச்சரியப்படும் விதமாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைத்துள்ளது. அதே போல் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும், ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய ஆல் ரவுண்டர் ராகுல் டிவாட்டியாவிற்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக இளம் வீரர் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த செயலால் நான் மிகப் பெரும் கவலை அடைந்தேன்; இறுதியாக மனம் திறந்த சூர்யகுமார் யாதவ் !! 3

ஆனால் கடந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் சூரியகுமார் யாதவின் பெயர் இடம்பெறவில்லை,இது கிரிக்கெட் வட்டாரங்களுக்கு இடையே மிகப் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யாதது மிகப் பெரிய முட்டாள்தனம் என்று கிரிக்கெட் ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் தங்களது கருத்தை தெரிவித்தனர். ஆனால் இதுபற்றி எதுவும் பேசாது மௌனம் காத்த சூர்யகுமார் யாதவ் தற்பொழுது அதுபற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இந்த செயலால் நான் மிகப் பெரும் கவலை அடைந்தேன்; இறுதியாக மனம் திறந்த சூர்யகுமார் யாதவ் !! 4

அதில் அவர் கூறியதாவது, இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றவுடன் எனக்கு மிகப்பெரும் கவலை ஏற்பட்டது, நான் என் மனைவியிடம் கூறிவிட்டு கடற்கரையில் ஒரு மணிநேரம் சென்று தனியாக நடந்தேன், பின் எனது அணியிடம் (மும்பை இந்தியன்ஸ்) சென்றவுடன் அனைவரும் என்னிடம் வந்து ஆறுதல் கூறினார்கள்.மேலும் அவர்கள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி பல அறிவுரைகளை வழங்கினார்கள்,உனக்கான நேரம் கண்டிப்பாக வரும் அதுவரை காத்திரு மற்றும் கடினமாக உழைத்திடு என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள் என்று கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *