எத்தனை வருடங்கள் விளையாடினாலும் என்னால் அவரது அருகில் கூட நெருங்க முடியாது; ஓபனாக பேசிய ஹர்திக் பாண்டியா !! 1

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவுடன் ஒப்பிட்டு பேசும் அளவிற்கு நான் வொர்த் கிடையாது என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

எத்தனை வருடங்கள் விளையாடினாலும் என்னால் அவரது அருகில் கூட நெருங்க முடியாது; ஓபனாக பேசிய ஹர்திக் பாண்டியா !! 2
Hardik Pandya thanks the fans after the final. Photo: Twitter@gujarat_titans

 

அணியும் புதிது அணிக்கு கேப்டனும் புதிது என்றாலும் தன்னுடைய முதல் தொடரிலேயே குஜராத் அணி கோப்பையை வென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாதான் என்று கூறலாம், அந்த அளவிற்கு இவருடைய பங்களிப்பு குஜராத் அணிக்கு மிகவும் சிறப்பாகவே இருந்தது.

கடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஹார்த்திக் பாண்டியா பேட்டிங், பந்துவீச்சு கேப்டன்ஷிப் என அனைத்திலும் கைதேர்ந்து கோப்பையை வென்றிருப்பது அவருடைய கடின உழைப்பை காட்டுவதாகவும், மேலும் இவருடைய ஆல்ரவுண்டர் திறமை மற்றும் கேப்டன்ஷிப் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவை ஞாபகப் படுத்துவதாகவும் பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

நான் அவ்வளவு வொர்த் கிடையாது….

எத்தனை வருடங்கள் விளையாடினாலும் என்னால் அவரது அருகில் கூட நெருங்க முடியாது; ஓபனாக பேசிய ஹர்திக் பாண்டியா !! 3

ஆனால், கபில்தேவுடன் ஒப்பிட்டு பாராட்டும் வகையில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று ஹர்திக் பாண்டியா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

 

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசுகையில், “கபில்தேவுடன் ஒப்பிட்டு பேசுவதை நான் மரியாதையுடன் நிராகரிக்கிறேன், ஏனென்றால் அவர் செய்த சாதனைகளை நான் நெருங்க கூட முடியாது, அவர் தன்னுடைய காலத்தில் என்ன செய்தாரோ அது மிகப்பெரும் சகாப்தமாகும், அவர் செய்தது 5% கூட செய்தது கிடையாது, என்னைப் பொறுத்தவரையில் நான் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் ஹர்திக் பாண்டியாதான், என்னுடைய வாழ்நாள் முடிவிலும் கபில்தேவ் செய்ததை செய்துவிடமுடியாது, அவர் அனைத்து காலகட்டத்திலும் பொருந்தும் சிறந்த கிரிக்கெட் வீரர், பவுலிங், பேட்டிங், பீல்டிங் உட்பட அவர் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம், சிலர் என்னை அவருடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் நான் அதை மரியாதையுடன் நிராகரிக்கிறேன்” என்று ஹர்திக் பாண்டியா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *