தீபக் ஹூடா
“லெஜண்ட்” இருக்கும் போது எனக்கு எப்படி அந்த இடம் கிடைக்கும்..? பெருந்தன்மையுடன் பேசிய தீபக் ஹூடா

எந்த இடத்தில் களமிறங்கினாலும் இந்திய அணிக்கான பங்களிப்பை செய்து கொடுப்பது மட்டுமே தனது வேலை என இந்திய அணியின் நட்சத்திர வீரரான தீபக் ஹூடா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

“லெஜண்ட்” இருக்கும் போது எனக்கு எப்படி அந்த இடம் கிடைக்கும்..? பெருந்தன்மையுடன் பேசிய தீபக் ஹூடா !! 1

இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டி.20 தொடரை தீர்மானிக்கு மூன்றாவது மற்றும் கடைசி டி.20 போட்டி நியூசிலாந்தின் நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு டீவன் கான்வே 59 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் நியூசிலாந்து அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

“லெஜண்ட்” இருக்கும் போது எனக்கு எப்படி அந்த இடம் கிடைக்கும்..? பெருந்தன்மையுடன் பேசிய தீபக் ஹூடா !! 2

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் அர்ஸ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியும் பாதியில் முடித்து கொள்ளப்பட்டது. டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால் போட்டி டிரா முடிந்தது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி.20 தொடரை கைப்பற்றியது.

சூர்யகுமார் யாதவ்

இந்தநிலையில், நியூசிலாந்து அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய இந்திய அணியின் ஆல் ரவுண்டரான தீபக் ஹூடா, எந்த இடத்தில் களமிறங்கினாலும் இந்திய அணிக்கான பங்களிப்பை செய்து கொடுப்பது மட்டுமே தனது வேலை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து தீபக் ஹூடா பேசுகையில், “நான் பேட்டிங் ஆல் ரவுண்டர், எனவே எந்த இடத்தில் களமிறங்கினாலும் நான் அணிக்கு தேவையான ரன்களை அடித்து கொடுக்க வேண்டும், அது தான் எனது வேலை. நான் பேட்டிங்கில் மட்டுமல்லாமல் எனது பந்துவீச்சிலும் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன், குறிப்பாக கடந்த மூன்று மாதங்களாக எனது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அதிக முயற்சிகள் எடுத்து வருகிறேன். அணியில் எனக்கு இடம் கிடைக்காவிட்டாலும் என்னை முன்னேற்றி கொள்வதற்காக மிக கடுமையாக உழைத்து வருகிறேன். ஐந்தாவது வீரராக பேட்டிங் செய்வதற்கே நான் விரும்புகிறேன், சூர்யகுமார் யாதவ் என்னும் லெஜண்ட் இருக்கும் பொழுது என்னால் எவ்வாறு மூன்றாவது இடத்தில் களமிறங்க முடியும். மூன்றாவது இடத்தில் களமிறங்க சூர்யகுமார் யாதவ் தான் சரியானவர். எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கவே முயற்சித்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.