இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது.

அகமதாபாத் பிட்ச் குறித்து பேசிய விராட் கோலியை தாக்கும் முன்னாள் வீரர்கள் ! 2

இதன் பிறகு இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிஸ்சில் 81 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 47 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதில்  இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது. இந்த போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் ஸ்பின் பவுலர்களான அக்சர் பட்டேல் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 7 விக்கெட்களையும் பார்ட் டைம் பவுலரான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.  

அகமதாபாத் பிட்ச் குறித்து பேசிய விராட் கோலியை தாக்கும் முன்னாள் வீரர்கள் ! 3

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்துள்ளதாலும் பேட்ஸ்மன்கள் பேட்டிங்கில் திணறியதாலும் பல்வேறு விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் வீரர்கள், வல்லுநர்கள் என அனைவரும் கருத்து தெறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி தோல்வி அடைந்ததற்கு பிட்ச் தான் முக்கிய காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.  இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் 400 விக்கெட்களை எட்டியுள்ளார். இதனை இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் மறைமுகமாக தாக்கி இருக்கிறார். 

எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் தெரியவில்லை; கூலாக சொன்ன அஸ்வின் !! 1

யுவராஜ் சிங் தனது டுவிட்டரில் “ இரண்டே நாளில் டெஸ்ட் போட்டி முடிவடைந்த இருப்பது  நல்லது கிடையாது.  இதுபோன்ற பிட்சுகளில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் கூட  1000 அல்லது 800 விக்கெட்டுகள் வீழ்த்திருப்பார்கள்.  எப்படியோ அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேலுக்கு எனது வழ்த்துக்கள்” என்று ட்விட் செய்திருக்கிறார். 

எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் தெரியவில்லை; கூலாக சொன்ன அஸ்வின் !! 2

இந்த டுவீட் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை மட்டம் தட்டி பேசியிருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் கொதிப்படைந்தனர்,இந்நிலையில் யுவராஜ் சிங்கிற்கு ஆதரவாக அஸ்வின் மற்றும் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, யுவ்ராஜ் சிங் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை அவர் அவருடைய வேதனையை பகிர்ந்திருக்கிறார் என்று கூறினார். மேலும் இதில் எந்த ஒரு தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றும் கூறினார். மேலும் அஸ்வின் கூறியதாவது, யுவராஜ் சிங்கை எனக்கு பல காலங்களாக தெரியும்.மேலும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது என்று கூறிய அஸ்வின், யுவ்ராஜ் சிங் அவருடைய கண்ணோட்டத்தை தான் தெரிவித்திருப்பதாக தனது கருத்தை வெளியிட்டார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *