எனது இந்த நிலமைக்கு தோனி தான் காரணம் என்றாலும் நான் அதற்கு பெருமைப்படுகிறேன்; தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் எனது இடத்தை சாதாரண வீரரிடம் இழக்கவில்லை, மிகச்சிறந்த வீரர் தோனியிடம்தான் இழந்திருக்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி சிறந்த பேட்ஸ்மேன், தலைசிறந்த கேப்டனாக உருவாகி சரித்திரம் படைத்தவர் மகேந்திர சிங் டோனி. இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான நயன் மோங்கியா ஓய்வு பெற்றதும், தலைசிறந்த விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைக்காமல் இருந்தனர்.

இடது கை பேட்ஸ்மேன் ஆன பார்தீவ் பட்டேல் 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் டெஸ்டில் அறிமுகமானார். அப்போது அவருக்கு 17 வயதுதான். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின் தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டு மும்பையின் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் களம் இறங்கினார்கள். இவரும் பெரிய அளவில் சாதிக்கவில்லை. அப்போது தினேஷ் கார்த்திக்கிற்கு 19 வயதுதான். இவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதன்பின்தான் டோனி முதன்முறையாக ஒருநாள் போட்டியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்காள தேச அணிக்கு எதிராக விக்கெட் கீப்பராக களம் இறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே, 2005-ம் ஆண்டு டிசம்பர் மாமத் 2-ந்தேதி சென்னையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.

அதன்பின் தலைசிறந்த வீரராக மாறியதால் தினேஷ் கார்த்திக் மற்றும் பார்தீப் பட்டேல் ஆகியோர் உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர்தான் சகா டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார்.

தற்போது சகா காயம் அடைந்துள்ளதால் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு தற்போதுதான் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சாதாரண வீரரால் எனக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காமல் போகவில்லை. ஒரு ஜாம்பவான் வீரரால் இடம் கிடைக்காமல் போனது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘நான் அறிமுகமாகிய தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை. அப்போது கடுமையான போட்டி நிலவியது. அந்த நேரத்தில் எம்எஸ் டோனி என்று அழைக்கப்பட்டவர் என்னுடைய கழுத்தை அழுத்தி மூச்சுவிட முடியாமல் செய்து விட்டார். அந்த நேரத்தில் உலகக் கிரிக்கெட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அதன்பின் டோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மாறிவிட்டார்.

 

87 டெஸ்ட் போட்டி இடைவெளிக்குப்பின் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளேன். நான் என்னுடைய இடத்தை ஒரு சாதாரண வீரரிடம் இழக்கவில்லை. டோனி என்ற ஜாம்பவானிடம் இழந்துள்ளேன். நான் அவருக்கு மதிப்பு அளிக்கிறேன். அந்த நேரத்தில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை நான் போதும் அளவிற்கு வெளிப்படுத்தவில்லை. தற்போது எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...