மொய்ன் அலிய பத்தி எனக்கு முன்னாடியே தெரியாம போயிடுச்சு... மைக்கெல் ஹசி சொல்கிறார் !! 1

சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலி சிறந்த பேட்ஸ்மேன் என்பது எனக்கு 2021இல் தான் தெரியும் என்று மைக்கல் ஹசி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரை மிக மோசமாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை அணி, அடுத்ததாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

மொய்ன் அலிய பத்தி எனக்கு முன்னாடியே தெரியாம போயிடுச்சு... மைக்கெல் ஹசி சொல்கிறார் !! 2


முதல் இரண்டு போட்டிகளிலும் படுதோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடரின் 11வது போட்டியில் மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 60 ரன்களும், ஷிகர் தவான் 33 ரன்களும் எடுத்தனர்.

மொய்ன் அலிய பத்தி எனக்கு முன்னாடியே தெரியாம போயிடுச்சு... மைக்கெல் ஹசி சொல்கிறார் !! 3


போட்டி நடைபெற்ற Brabourne ஆடுகளத்தில், 180 ரன்கள் என்பது இலகுவாக எட்டக்கூடிய இலக்கு என்றே கருதப்பட்டது, இதனால் சென்னை அணி இந்த போட்டியில் ஈசியாக வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னை அணியோ பேட்டிங்கில் படு மோசமாக செயல்பட்டது. சிவம் துபே (57) மற்றும் தோனி (23) ஆகிய இருவரை தவிர மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை,இதனால் சென்னை அணி 126 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்தநிலையில் லக்னோ அணிக்கு(35 ரன்கள்) எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட்டான இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மோயின் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி பாராட்டியுள்ளார்.

மொய்ன் அலிய பத்தி எனக்கு முன்னாடியே தெரியாம போயிடுச்சு... மைக்கெல் ஹசி சொல்கிறார் !! 4

மோயின் அலி குறித்து மைக்கேல் ஹசி பேசுகையில், நேர்மையாக சொல்லப்போனால் மோயின் அலி மிகவும் அற்புதமான ஒரு வீரர், அவரை கடந்த ஆண்டு சென்னை அணியில் இணைந்ததிலிருந்து மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் அதற்கு முன்புவரை அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மென் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது, மோயின் அலி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தெய்வீகமான வீரர். அதேபோன்று பந்துவீச்சிலும் இவர் மிக சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு வீரர் என்று மோயின் அலியை மைக்கல் ஹசி பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *