தோனிக்கு அணியில் இடம் கொடுங்கள், எனக்கு வேண்டாம்: விராத் கோலி ஓபன் டாக் 1

தோனி, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் கொடுங்கள். எனக்கு வேண்டாம் என விராத் கோலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

உலக கோப்பையை அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மொத்தம் 8 போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது.

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரர்களின் பட்டியலை தனித்தனியாக ஜூலை 21ம் தேதி இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் வெளியிட்டார்.

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முதலில் ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், தான் தொடர்ந்து ஆட விரும்புவதாக விராட் கோலி தெரிவித்ததால், அவருக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டது.

தோனிக்கு அணியில் இடம் கொடுங்கள், எனக்கு வேண்டாம்: விராத் கோலி ஓபன் டாக் 2

ஜூலை 29ம் தேதி முதல் கட்டமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்கள் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்ல இருக்கின்றனர். இதற்கு முன்னதாக, கபடி போட்டிகளுக்கான புரோ கபடி நிகழ்ச்சியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் இரு அணிகளும் மோதும் போட்டியை விராட் கோலி கண்டுகளிக்க சென்றார்.

துவக்க நிகழ்ச்சியில் தேசிய கீதம் முடித்துவிட்டு விராட் கோலி பேசுகையில், “உலகில் கபடியை பொறுத்தவரை இந்திய அணி தலைசிறந்தது. புரோ கபடி, கபடி போட்டியின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகமாக்கி உள்ளது. உலக அளவில் கபடி போட்டி அங்கீகாரம் பெற்ற விளையாட்டாக மாற இந்திய வீரர்களின் மனஉறுதியும், உடல்தகுதியும் தான் காரணம்” என தெரிவித்தார்.

தோனிக்கு அணியில் இடம் கொடுங்கள், எனக்கு வேண்டாம்: விராத் கோலி ஓபன் டாக் 3

மேலும், கபடி போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றால் எவ்வாறு இருக்கும் என சுவாரஷ்யமான பேசினார். அப்போது “கபடி விளையாடுவதற்கு அதிக அளவில் வலிமை மற்றும் விளையாட்டுத்திறன் தேவை. ஆதலால், தோனி, ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் கபடிக்கு சரியாக இருப்பார்கள். ரிஷப் பண்ட் கூட சரியாக இருப்பார் என நினைக்கிறேன் என்றார்.

கே எல் ராகுல் மற்றும் பும்ராஹ் கூட சரியாக இருப்பார்கள். ஆனால், எனக்கு அணியில் இடம் இல்லை. ஏனெனில், இந்த ஏழு பேர் என்னைவிட வலிமையானவர்கள் மற்றும் விளையாட்டுத் திறன் கொண்டவர்கள்” என தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *