எனது மிகப்பெரும் கனவே நிறைவேறியுள்ளது; சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி !! 1

விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்ற தனது கனவு நிறைவேற உள்ளதாக சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் மூலம் பிரபலமடைந்த இளம் வீரர்களில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் மிக முக்கியமானவர்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், யூசுப் பதானில் இருந்து து நடராஜன் வரை பலர் இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தாலும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் நீண்டகாலமாக இடமே கிடைக்கவில்லை.

எனது மிகப்பெரும் கனவே நிறைவேறியுள்ளது; சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி !! 2

நீண்ட போராட்டத்திற்கு பிறகு இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். மிகப்பெரும் போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்திய அணியில் தான் தேர்வாகியுள்ளது குறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ், விராட் கோலியின் தலைமையின் கீழ் விளையாட வேண்டும் என்ற தனது மிகப்பெரும் கனவு நிறைவேற உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

எனது மிகப்பெரும் கனவே நிறைவேறியுள்ளது; சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி !! 3

இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “இந்திய அணியில் தேர்வாகியுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விராட் கோலியின் தலைமையின் கீழ் ஒன்றாக விளையாட வேண்டும் என்பது எனது மிகப்பெரும் கனவாக இருந்தது, தற்போது எனது கனவு நிறைவேறியுள்ளது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விராட் கோலியுடன் சேர்ந்து விளையாடி நிறைய விசயங்களை கற்று கொள்ளவும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு எதிராக தான் இதுவரை விளையாடியுள்ளேன். களத்தில் அவரது துடிப்பான செயல்பாடுகள் இந்திய அணிக்கு மிகப்பெரும் வெற்றியை பெற்று கொடுத்துள்ளது. அவரிடம் இருந்து நிச்சயம் நிறைய விசயங்கள் கற்று கொள்வேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் எனது சக வீரரான ஹர்திக் பாண்டியா விராட் கோலியை பற்றி அதிகம் பேசியுள்ளார். விராட் கோலியின் எனர்ஜி, அவரது பேட்டிங் நுனுக்கங்கள் போன்றவற்றை ஹர்திக் பாண்டியாவிடம் அதிமான முறை பேசியுள்ளேன். பயிற்சியின் போதும், களத்திலும் விராட் கோலியின் அனுகுமுறையும் செயல்பாடுகளும் மிக வித்தியாசமாக இருக்கும் என ஹர்திக் பாண்டியா என்னிடம் கூறினார், இது போன்ற விசயங்களை தான் கற்று கொள்ள காத்துள்ளேன்”என்றார்.

டி.20 தொடருக்கான இந்திய அணி;

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன்( விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ராகுல் திவாடியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *