இத்தனை வருஷத்துல ஜடேஜா இப்படி பீல் பண்ணி பாத்ததே இல்லை.. இன்னைக்கு முதல்முறையா வருத்தப்பட்டு பாத்தேன் - அஸ்வின் பேட்டி! 1

4வது டெஸ்ட்ல ஜடேஜா அவுட் ஆனபின் மிகவும் வருத்தப்பட்டார் இதற்குமுன் அவரை அப்படி நான் பார்த்ததே இல்லை என்று பேசியுள்ளார் அஸ்வின்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இந்திய அணியும், மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த  நான்காவது டெஸ்ட் போட்டி இரு அணிகளின் சிறப்பான பேட்டிங்கால் டிராவில் முடிவடைந்தது.

இறுதியில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி புதிய வரலாறும் படைத்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்டுகள் மற்றும் 86 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 22 விக்கெட்டுகள் மற்றும் 135 ரன்கள் என பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்டனர்.

இத்தனை வருஷத்துல ஜடேஜா இப்படி பீல் பண்ணி பாத்ததே இல்லை.. இன்னைக்கு முதல்முறையா வருத்தப்பட்டு பாத்தேன் - அஸ்வின் பேட்டி! 2

அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் இணைந்து தொடர்நாயகன் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. விருதைப் பெற்ற அஸ்வின் மற்றும் ஜடேஜா இருரிடமும், அவர்களுக்கு இடையேயான நட்பை பற்றியும் தொடரில் வெளிப்படுத்திய அபாரமான செயல்பாடுகள் பற்றியும் பேட்டியில் கேட்கப்பட்டது. முதலில் பேசிய ஜடேஜா, “அஸ்வின் ஜீனியஸ். எனக்கு தடுமாற்றம் வரும்போதெல்லாம் என்ன செய்யவேண்டும் என்பதை உடன் இருந்து சொல்லிக்கொண்டே இருப்பார்.”

அடுத்ததாக தனது செயல்பாடு பற்றி பேசிய ஜடேஜா, “பந்துவீச்சில் நான் செயல்பட்டது மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால், பேட்டிங் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அடுத்தடுத்த தொடர்களில் இன்னும் சிறப்பாக செயல்பட கடினமான பயிற்சியை மேற்கொள்வேன்.” என்றார்.

இத்தனை வருஷத்துல ஜடேஜா இப்படி பீல் பண்ணி பாத்ததே இல்லை.. இன்னைக்கு முதல்முறையா வருத்தப்பட்டு பாத்தேன் - அஸ்வின் பேட்டி! 3

மேலும் ஜடேஜா பற்றி பேசிய அஸ்வின், “கடந்த 2-3 வருடங்களாகத்தான் உணர்ந்தேன். ஜடேஜா இல்லமால் என்னால் முழுமையாக செயல்பட்டிருக்க முடியாது. இத்தனை வருடங்கள் இப்படி சிறப்பாக ஆடியிருக்க முடியாது.” என்று இருவருக்கும் இருக்கும் பவுலிங் பார்ட்னர்ஷிப் பற்றி பேசினார்.

அடுத்ததாக, 4வது டெஸ்ட் போட்டியின் அவுட் ஆனபிறகு ஜடேஜா வருத்தப்பட்டதை பற்றி வெளிப்படையாக பேசிய அஸ்வின், “எதற்கும் வருத்தப்படாமல் ஈசியாக எடுத்துக்கொள்ளும் ஜடேஜா, இந்த டெஸ்டில் அவுட் ஆனபின் மிகவும் வருத்தமாக காணப்பட்டார். அதிலிருந்தே தெரிகிறது அணிக்கு எவ்வளவு தூரம் பங்களிப்பை கொடுக்கவேண்டும் என்கிற முனைப்பு அவரிடம் இருக்கிறது என்று.” என கூறினார்.

இத்தனை வருஷத்துல ஜடேஜா இப்படி பீல் பண்ணி பாத்ததே இல்லை.. இன்னைக்கு முதல்முறையா வருத்தப்பட்டு பாத்தேன் - அஸ்வின் பேட்டி! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *