போனா போகட்டும் அடுத்த முறை பாத்துக்குவோம்; பாகிஸ்தான் அணிக்கு தோள் கொடுத்த முன்னாள் வீரர் !! 1

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.
இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

போனா போகட்டும் அடுத்த முறை பாத்துக்குவோம்; பாகிஸ்தான் அணிக்கு தோள் கொடுத்த முன்னாள் வீரர் !! 2


நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதால் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் விளையாட்டை விளையாட்டாய் மட்டும் பார்க்க வேண்டும் என்பது போன்ற கருத்தை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் சாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

போனா போகட்டும் அடுத்த முறை பாத்துக்குவோம்; பாகிஸ்தான் அணிக்கு தோள் கொடுத்த முன்னாள் வீரர் !! 3

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, இந்த உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளீர்கள், அது எங்களை பெருமைப்படுத்தி உள்ளது, மேலும் இந்த தொடர் ஒரு மிகச்சிறந்த தொடராகவே இருந்தது அதில் ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த விளையாடியது என்று ஆஸ்திரேலிய அணி பாராட்டினார் மேலும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன் என்றும் அதில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.