டி.20 தொடர் மிஸ் ஆகிடுச்சு... ஒருநாள் தொடர் கண்டிப்பா எங்களுக்கு தான்; முன்னாள் நியூசிலாந்து வீரர் உறுதி !! 1
டி.20 தொடர் மிஸ் ஆகிடுச்சு… ஒருநாள் தொடர் கண்டிப்பா எங்களுக்கு தான்; முன்னாள் நியூசிலாந்து வீரர் உறுதி

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியே வெல்லும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராஸ் டெய்லர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

டி.20 தொடர் மிஸ் ஆகிடுச்சு... ஒருநாள் தொடர் கண்டிப்பா எங்களுக்கு தான்; முன்னாள் நியூசிலாந்து வீரர் உறுதி !! 2

இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி 25ம் தேதி நடைபெற உள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியே வெல்லும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ராய் டெய்லர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணி

இது குறித்து ராஸ் டெய்லர் பேசுகையில், “ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணியே வெல்லும் என கருதுகிறேன். ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி வலுவானதாக உள்ளது. நியூசிலாந்து ஆடுகளங்கள் குறித்தும் நியூசிலாந்து வீரர்களுக்கு நன்கு தெரியும். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி.20 தொடரை முழுவதுமாக கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதுமாக இழந்தது. அது போன்றே இந்த தொடரிலும் நடக்கும் என கருதுகிறேன். ஏனெனில் டி.20 போட்டிகளுக்கான அணியை விட ஒருநாள் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணி வலுவானது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.