பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான 2வது டி20 போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 29 (21) ரன்கள் எடுத்திருந்த நிலையில், லிடான் தாஸ் ரன் அவுட் ஆனார். முகமது நைம் 36 (31) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் வந்த சவுமியா சர்கார் மற்றும் முகமதுல்லா ஆகியோர் தலா 30 ரன்களை எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

யுவராஜ் சிங்கை போல் இதனை செய்ய திட்டமிட்டேன்: திடுக் தகவலை வெளியிட்ட ரோஹித் சர்மா 1
Mahmudullah (Captain) of Bangladesh bats during the 2nd T20I match between India and Bangladesh held at the Saurashtra Cricket Association Stadium, Rajkot on the 7th November 2019.
Photo by Deepak Malik / Sportzpics for BCCI

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர் முதல் போட்டியில் அடைந்த தோல்வியின் கோபம் ரோகித் ஷர்மாவின் பேட்டிங்கில் தெரிந்தது. ரசிகர்களை உற்சாகப்படுத்த வான வேடிக்கை காட்டிய அவர், 23 பந்துகளில் அரை சதம் அடித்தார்.

31 (27) ரன்களில் தவான் ஆட்டமிழக்க, 43 ரன்களுக்கு 85 ரன்கள் விளாசிய ரோகித் ஷர்மாவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் எளிதாக பேட்டிங் செய்து 15.4 ஓவர்களில் இலக்கை எட்டினர். இதனால் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.வ்

 

இந்நிலையில், பிசிசிஐக்காக சுழற்பந்துவீச்சாளர் சஹாலுக்கு ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:

யுவராஜ் சிங்கை போல் இதனை செய்ய திட்டமிட்டேன்: திடுக் தகவலை வெளியிட்ட ரோஹித் சர்மா 2
Rohit Sharma (Captain) of India play a shot during the 2nd T20I match between India and Bangladesh held at the Saurashtra Cricket Association Stadium, Rajkot on the 7th November 2019.
Photo by Arjun Singh / Sportzpics for BCCI

நான் தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் அடித்தபோது, ஆறு சிக்ஸர்களை அடிக்க எண்ணினேன். ஆனால் நான்காவது சிக்ஸரைத் தவற விட்ட பிறகு சிங்கிள்ஸ் எடுக்க முயன்றேன். மிகவும் பலசாலியாக இருந்துதான் சிக்ஸர் அடிக்க முடியும் என்பதில்லை. நீங்கள் (சஹால்) கூட சிக்ஸர் அடிக்கலாம். சிக்ஸ் அடிக்க பலம் மட்டுமே போதாது, சரியான டைமிங்கிலும் அடிக்கவேண்டும். தலை சரியான நிலையுடன் இருக்கவேண்டும். பந்து பேட்டின் நடுவில் பட வேண்டும். எனவே ஒரு சிக்ஸர் அடிக்க பல விஷயங்கள் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.



  • SHARE
  • விவரம் காண

    ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு !!

    ஐ.பி.எல் டி.20 தொடர் நடக்குமா..? கெவின் பீட்டர்சன் புதிய கணிப்பு ஐபிஎல் போட்டி குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், கண்டிப்பாக நடைபெறும்...

    இந்த இரண்டு பேர் தான் உலகின் தலை சிறந்த துவக்க வீரர்கள்; டாம் மூடி பாராட்டு !!

    இந்த இரண்டு பேர் தான் உலகின் தலை சிறந்த துவக்க வீரர்கள்; டாம் மூடி பாராட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் உலகின் தலைசிறந்த தொடக்க...

    அந்த முக்கியமான முடிவை நான் தான் எடுத்தேன்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் !!

    அந்த முக்கியமான முடிவை நான் தான் எடுத்தேன்; ரகசியத்தை உடைத்துள்ளார் சச்சின் 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கோலி ஆட்டமிழந்ததும் யுவராஜை இறக்காமல்...

    தோனியை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய நெஹ்ரா; காரணம் என்ன தெரியுமா..?

    தோனியை கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டிய நெஹ்ரா; காரணம் என்ன தெரியுமா..? 15 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேட்ச்சை விட்டதற்காக அப்போதைய...

    ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் !!

    ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடக்க வேண்டும்; முன்னாள் வீரர் சொல்கிறார் கொரோனா பீதியால் ஐபிஎல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஐபிஎல் கண்டிப்பாக...