ஒருத்தர் அடிச்சாலே இந்த ஸ்கொர் ஜுஜுபி... இதுல ரெண்டு பேரும் பூந்து விளையாடிட்டோம் - வெற்றிக்களிப்பில் பேசிய டிராவிஸ் ஹெட்! 1

ஒருத்தர் அடித்து ஆடினால், இன்னொருத்தர் சப்போர்ட் செய்வார். ஆனால் இப்போட்டியில் இரண்டு பேருமே அடித்து துவம்சம் செய்தது நன்றாக இருந்தது என டிராவிஸ் ஹெட் பேசியுள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் செய்ததால், இந்திய அணி பேட்டிங் துவங்கியது. முதல் ஒருநாள் போட்டியைப் போலவே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் மிட்ச்சல் ஸ்டார்க் பந்தில் தடுமாறினர்.

சுப்மன் கில்(0), ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) ஆகிய 4 பேரின் விக்கெட்டை முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே மிட்ச்சல் ஸ்டார்க் எடுத்தார். பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 1 ரன்னுக்கும், நிலைத்து ஆடிவந்த விராட் கோலி 31 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

 

ஒருத்தர் அடிச்சாலே இந்த ஸ்கொர் ஜுஜுபி... இதுல ரெண்டு பேரும் பூந்து விளையாடிட்டோம் - வெற்றிக்களிப்பில் பேசிய டிராவிஸ் ஹெட்! 2

71 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்ததாக வந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் அவுட்டானார். அக்சர் பட்டேல்(29*) இறுதிவரை போராடிவர, சிராஜ், சமி இருவரும் ரன் எதுவும் அடிக்காமல் அவுட்டாகினர். 26 ஓவர்களுக்கு 117 ரன்கள் இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை தூக்கினார்.

118 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட், மிட்ச்சல் மார்ஷ் இருவரும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டு, விக்கெட் விட்டுக்கொடுக்காமல் வேலையை முடித்தனர். இருவரும் சேர்ந்து 11வது ஓவரில் 121 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தனர். டிராவிஸ் ஹெட் 51* ரன்கள்(10 பவுண்டரிகள்), மிட்ச்சல் மார்ஷ் 66* ரன்கள்(6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) அடுத்து இறுதிவரை அவுட்டாகாமல், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெறச்செய்தனர்.

ஒருத்தர் அடிச்சாலே இந்த ஸ்கொர் ஜுஜுபி... இதுல ரெண்டு பேரும் பூந்து விளையாடிட்டோம் - வெற்றிக்களிப்பில் பேசிய டிராவிஸ் ஹெட்! 3

மிட்ச்சல் மார்ஷ் உடன் சேர்ந்து, இரண்டாவது போட்டியில் இந்திய பவுலர்களை பந்தாடி, இறுதிவரை அவுட்டாகாமல் வெற்றியை உறுதி செய்த டிராவிஸ் ஹெட், போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார். வெற்றிக்களிப்பில் டிராவிஸ் ஹெட் பேசியதாவது:

“நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து, வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. துவக்கத்தில் ஒன்றிலிருந்து ஓவர்கள் செட்டில் ஆன பிறகு நன்றாக அடித்து விளையாடினோம். எனக்கு மறுமுனையில் மிட்ச்சல் மார்ஷ் இருப்பது இன்னும் நன்றாக இருந்தது. அவர் இந்திய பவுலர்கள் வீசிய பந்தை பெவிலியன் இரண்டாவது மாடியில் தூக்கி அடித்துக்கொண்டிருந்தார்.

ஒருத்தர் அடிச்சாலே இந்த ஸ்கொர் ஜுஜுபி... இதுல ரெண்டு பேரும் பூந்து விளையாடிட்டோம் - வெற்றிக்களிப்பில் பேசிய டிராவிஸ் ஹெட்! 4

இந்த சின்ன ஸ்கோரை சேஸ் செய்ய யாராவது ஒருவர் அடித்தால் போதுமானது என்று திட்டமிட்டு இறங்கினோம். ஆனால் இரண்டு பேரும் ஒரே நேரத்தில் இன்னிங்ஸ் முழுவதும் அடித்து விளையாடியது மிகவும் அரிதான சம்பவம். வழக்கமாக, ஒருத்தர் அடித்து விளையாட ஆரம்பித்தால் மற்றொருவர் சப்போர்ட் செய்வர். ஆனால் இன்று இரண்டு பேருமே அடித்துக்கொண்டே இருந்தோம். அதிலும் எந்த பந்தை அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டே விளையாடினோம். சிறந்த பார்ட்னர்ஷிப் மற்றும் சிறப்பான ஆட்டம். நன்றாக என்ஜாய் செய்தேன்.” என ஹெட் தனது பேட்டியில் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *