சாம்பியன்ஸ் டிராப்பி தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என யுவராஜ் சிங்க் கூறினார்.
இங்கிலாந்தில் ஜூன் மாதம் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராப்பி என்னும் தொடர் நடக்க உள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
பல பிரச்சனைகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் ட்ராப்பியில் இந்திய அணி கொள்வதை உறுதிப்படுத்தியது இந்திய கிரிக்கெட் அணி வாரியம் (பிசிசிஐ). இதனால் சாம்பியன்ஸ் டிராப்பியில் பங்கேற்கும் 15-பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணியில் தோனி கேப்டனாக இருக்கும் வரை யுவராஜ் சிங்க் அணியில் நுழையமுடியவில்லை. அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் தற்போது விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். விராட் கோலி கேப்டன் ஆனதுக்கு பிறகு பல போட்டிகளில் விளையாடிவிட்டார் யுவராஜ் சிங்க். ஜூன் மாதம் விளையாடப்போகும் சாம்பியன்ஸ் தொடருக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை வீணடிக்க மாட்டேன் என்று யுவராஜ் சிங்க் கூறினார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில்,’ இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது, அளவில்லாத ஆனந்தத்தை தருகிறது. அதனால் என்னால் முடிந்த 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்தி, திறமையை நிரூபிப்பேன். இங்கிலாந்தில் நிறைய இந்தியர்கள் வாழ்கின்றனர். அதனால் அதுகிட்டத்தட்ட, சொந்தமண்ணில் விளையாடுவது போலத்தான் இருக்கும். இதுவும் எனக்கு நிச்சயமாக ஊக்கமளிக்கும்,’ என்றார்.