ஓய்விற்கு பிறகு பேட்டை எடுக்கவே மாட்டேன்; விராட் கோஹ்லி உறுதி

ஓய்வை அறிவித்து விட்டால் அதற்கு பிறகு பேட்டை கையில் எடுக்கவே மாட்டேன் என இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடக்கிறது. ஒருவேளை பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான தடையை தளர்த்தினாலோ அல்லது ஓய்விற்குப் பிறகோ பிக் பாஷ் தொடரில் விளையாடுவீர்களா? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

30th December 2018, Melbourne Cricket Ground, Melbourne, Australia; International Test Cricket, Australia versus India, third test, day five; Virat Kohli of India shares a laugh during rain delays (photo by Morgan Hancock/Action Plus via Getty Images)

அதற்கு விராட் கோலி பதிலளித்து கூறுகையில் ‘‘எதிர்காலத்தில் என்னுடைய வாழ்க்கை எப்படி செல்லப்போகிறது என்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னால் முடியும் அளவிற்கு போதுமான கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். உண்மையிலேயே எதிர்காலம் குறித்து நான் சிந்திக்கவே இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். எனது ஓய்வு குறித்து கருத்து கூற முடியாது. ஏனென்றால், திரும்பவும் பேட்டை எடுப்பது குறித்து சிந்திக்கவில்லை.

என்னுடைய கிரிக்கெட் காலம் ஒருநாள் முடியும் என்றால், அதற்குள் ஒட்டுமொத்த கிரிக்கெட்டையும் விளையாடியிருப்பேன். காரணம், அப்போது நான் முடிவை நோக்கி சென்று கொண்டிருப்பேன். ஆகவே, திரும்பவும் கிரிக்கெட் வாழ்க்கைக்கு திரும்புவதை நான் பார்க்கவில்லை. ஒருமுறை கிரிக்கெட் விளையாடி முடித்துவிட்டால், அது முடிந்ததாகத்தான் இருக்கும். மீண்டும் அதே சூழ்நிலையை விரும்பமாட்டேன்’’ என்றார்.

ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல் விவகாரம் குறித்து பேசிய விராட் கோஹ்லி, அது அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், கிரிக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறினார். மேலும், இந்த விஷயத்தில் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.

‘அணியில் மாற்றம் செய்தாலும் நமது நம்பிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அறிவித்தபிறகு, யாரை அணியில்  சேர்ப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்’ என்றார் கோலி.



  • SHARE

    விவரம் காண

    யுவராஜ் சிங் அதிரடி வீண்…! மும்பை அணி தோல்வி! ட்விட்டர் ரியாக்சன்!!

    12-ஆவது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) 2-ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில்...

    வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் !!

    வீடியோ; ஹெலிகாப்டர் ஷாட் அடித்து மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் ருத்ரதாண்டம் ஆடியுள்ளார். ஐ.பி.எல்...

    பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

    பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க...

    ரிஷப் பன்ட் பேயடி!! டெல்லி அணி 213 ரன் குவிப்பு!! ட்விட்டர் ரியாக்சன்!!

    மும்பை மற்றும் டெல்லி அணிகள் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் ஆடும் லெவன் ரோஹித்...

    ராஜஸ்தான் vs பஞ்சாப்: ராஜஸ்தான் மண்ணில் வெல்லுமா பஞ்சாப்?

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) இரு அணிலும் 4வது ஆட்டத்தில் மோதுகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில்...