மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும்; ஆஃப்கானிஸ்தான் வீரர் விருப்பம் !! 1
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும்; ஆஃப்கானிஸ்தான் வீரர் விருப்பம்

இந்தியாவில்  நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சபூர் ஜார்டன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான அந்தஸ்தை பெற்ற ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, தனது டெஸ்ட் பயணத்தை இந்திய அணியுடன் இருந்து துவங்க உள்ளது. இதற்காக இந்தியா வருகிற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஜூன் 14ம் தேதி துவங்க உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும்; ஆஃப்கானிஸ்தான் வீரர் விருப்பம் !! 2

இதற்காகாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தனது டெஸ்ட் பயணத்தை வெற்றியுடன் துவங்குவதற்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

டெஸ்ட் போட்டி துவங்க இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது ஆசை என்று ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும்; ஆஃப்கானிஸ்தான் வீரர் விருப்பம் !! 3

இது குறித்து சபூர் ஜோர்டான் கூறியதாவது, “ஒவ்வொரு இளம் கிரிக்கெட் வீரருக்கும், உலகின் தலை சிறந்த கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அதே கனவு உள்ளது. குறிப்பாக இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடரில் இடம்பிடிக்க ஆவலுடன் காத்துள்ளேன், ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதே எனது நீண்ட நாள் ஆசையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும்; ஆஃப்கானிஸ்தான் வீரர் விருப்பம் !! 4
Afghanistan bowler Shapoor Zadran (L) celebrates dismissing Scotland batsman Matthew Cross (R) during their 2015 Cricket World Cup Group A match in Dunedin on February 26, 2015. AFP PHOTO / William WEST (Photo credit should read WILLIAM WEST/AFP/Getty Images)

பிட்ச் எப்படி இருக்கும்;

ஆடுகளம் ஐந்து நாட்கள் போட்டி நடைபெறும் வகையில் சவாலானதாக இருக்கும் என கர்நாடக கிரிக்கெட் சங்க ஆடுகளம் பராபரிப்பாளர் கே ஸ்ரீராம் கூறியுள்ளார்

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்டிற்காக தயார் செய்யப்படும் ஆடுகளம் சிறந்ததாக இருக்கும். நாங்கள் இந்தியாவிற்காகவோ, ஆப்கானிஸ்தானிற்காகவோ ஆடுகளம் தயார் செய்து கொண்டிருக்கவில்லை. ஆனால், சிறந்த கிரிக்கெட் ஆட்டமாக இருக்கும்.

ஆடுகளத்தில் சற்று புற்கள் இருக்கும். நாட்கள் ஆகஆக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும். ஆட்டம் ஐந்து நாட்கள் நடைபெறும் வகையில் ஆடுகளம் இருக்கும். மழை அவ்வப்போது குறுக்கீடு செய்கிறது. அதை சமாளித்து தயார் செய்து வருகிறோம். எந்தவித நெறுடலும் இல்லாமல் ஆடுகளம் தயார் செய்து கொடுக்கப்படும்.

Leave a comment

Your email address will not be published.