எல்லாத்துக்கும் கேப்டன் பதவி தான் காரணம்; ரிஷப் பண்ட்டின் மோசமான பேட்டிங் குறித்து பேசிய முன்னாள் வீரர் !! 1

நான் தேர்வாளராக இருந்தால் ரிஷப் பண்ட்டை ஒருபோதும் கேப்டனாக நியமிக்க மாட்டேன் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் மதன் லால் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையை அடைந்தது.

எல்லாத்துக்கும் கேப்டன் பதவி தான் காரணம்; ரிஷப் பண்ட்டின் மோசமான பேட்டிங் குறித்து பேசிய முன்னாள் வீரர் !! 2

முதல் இரண்டு போட்டியில் படுதோல்வியடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்றதற்கு இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, சாஹல் போன்றோரின் பங்களிப்புகள் முக்கியமானதாக இருந்தாலும், கேப்டனான ரிஷப் பண்ட் இந்த தொடரின் ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

இந்திய அணியின் கடந்த இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாலும், ரிஷப் பண்ட் பேட்டிங்கில் மிக மோசமாக செயல்பட்டு வருவதை முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எல்லாத்துக்கும் கேப்டன் பதவி தான் காரணம்; ரிஷப் பண்ட்டின் மோசமான பேட்டிங் குறித்து பேசிய முன்னாள் வீரர் !! 3

மேலும் இவருக்கு இனிமேல் கேப்டன் பதவி கொடுக்க கூடாது என்றும் உலக கோப்பை தொடரில் இவரை கழட்டிவிட்டு தரமான ஒரு வீரரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்திய அணிக்கு பலரும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில் நானாக இருந்திருந்தால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமித்து இருக்கமாட்டேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிசிசிஐயின் தேர்வாளருமான மதன்லால் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

எல்லாத்துக்கும் கேப்டன் பதவி தான் காரணம்; ரிஷப் பண்ட்டின் மோசமான பேட்டிங் குறித்து பேசிய முன்னாள் வீரர் !! 4

அதில், நான் தேர்வாளர் ஆக இருந்தால் அவரை இந்திய அணியின் கேப்டனாக நியமித்திருக்க மாட்டேன், இது போன்ற ஒரு மிகப் பெரும் பொறுப்பை அவருக்கு காலதாமதமாகவே கொடுக்க வேண்டும், இந்திய அணியின் கேப்டனாக இருப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று, அவர் மிகவும் சின்ன பையன் தற்பொழுது அவருக்கு இந்த பொறுப்பு சரிப்பட்டு வராது அவர் இன்னும் கொஞ்சம் பக்குவப்பட வேண்டும், இரண்டு வருடம் கழித்து அவருடைய விளையாட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கும் அப்பொழுது அவர் கேப்டனாக இருந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நம்பலாம் இது ஒவ்வொரு வீரரின் இயல்பான ஒன்றுதான், எம்எஸ் தோனி மிகவும் அமைதியான மற்றும் சிறப்பான கேப்டன், விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் ஆனால் இதை வைத்து நான் ரிஷப் பண்ட் மோசமாக பேட்டிங் செய்கிறார் என்று சொல்ல வரவில்லை, அவர் இன்னும் சிறிது காலம் விளையாடி தன்னுடைய பக்குவத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன் என மதன்லால் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.