JCC
ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக மாறவேண்டுமா?
இங்கே ரெஜிஸ்டர் செய்யுங்கள்

*T&C Apply

“ஐசிசி ப்ளீஸ்.. இதுக்கு வேறுவழி சொல்லுங்க” – புலம்பும் பும்ராஹ்! காரணம் என்ன தெரியுமா?

கொரோனாவிற்கு பிறகு வீரர்களின் உடலநலனை கருத்தில் கொண்டு புதிய விதிமுறைகளை அமல்படுத்த ஐசிசி முடிவெடுத்துள்ள நிலையில், இந்த ஒரு விதிக்கு மட்டும் மாற்றுவழி சொல்லவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் பும்ராஹ்.

உலகெங்கிலும் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறை இன்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது."ஐசிசி ப்ளீஸ்.. இதுக்கு வேறுவழி சொல்லுங்க" - புலம்பும் பும்ராஹ்! காரணம் என்ன தெரியுமா? 1

மீண்டும் கிரிக்கெட் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பினால், அப்போது சில புதிய விதிமுறைகளை வீரர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக, இனி பந்தை பளபளப்பாக்க பந்துவீச்சாளர்கள் எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பதாகும்.

எச்சில் பயன்படுத்தக்கூடாது என்பது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு பாதிப்பாக அமையும். டெஸ்ட் போட்டிகளில் பந்தை ஸ்விங் செய்ய, அதன் மீது எச்சில் தடவி பளபளப்பாக்குவது வழக்கம். இதற்கு தடை விதித்தால் போட்டி முழுமுழுக்க பேட்ஸ்மேனுக்கு சாதகமாக மாறிவிடும் என பலரும் புகார் அளித்துவருகின்றனர்.

"ஐசிசி ப்ளீஸ்.. இதுக்கு வேறுவழி சொல்லுங்க" - புலம்பும் பும்ராஹ்! காரணம் என்ன தெரியுமா? 2

இதுகுறித்து பேசிய பும்ராஹ் கூறுகையில், “களத்தில் சக வீரருடன் கை தட்டிக் கொண்டாடுவது, கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது எனது வழக்கமல்ல. இதனால் ஐ.சி.சி., விதித்துள்ள கட்டுப்பாடுகள் பிரச்னையாக அமையவில்லை. ஆனால், எச்சிலுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இப்போது சிறிய மைதானங்கள், மந்தமான ஆடுகளங்கள் தான் காணப்படுகின்றன. நியூசிலாந்தில் பவுண்டரியின் அளவு 50 மீட்டர் தான். இங்கு சும்மா அடித்தாலே பந்து, சிக்சருக்கு பறக்கும். இந்தச் சூழலில் பந்தை பளபளப்பாக்க தவறினால், பவுலர்கள் நிலைமை பரிதாபமாகிவிடும். எனவே, எச்சிலுக்கு பதில் வேறு ஏதாவது பயன்படுத்தும் வகையில் மாற்று வழியை கண்டறிய வேண்டும்.” என்றார். • SHARE
 • விவரம் காண

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் !!

  இது மட்டும் நடந்துவிட்டால் ரோஹித் சர்மாவை யாரும் தடுக்க முடியாது; முன்னாள் வீரர் ஓபன் டாக் முதல் 45 நிமிடங்கள் ரோஹித் சர்மா நிலைத்து...

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !!

  அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது...

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு !!

  கேப்டன் பதவியில் நான் சொதப்பியதற்கு இவர் மட்டும் தான் காரணம்; கங்குலி அதிரடி பேச்சு ஐ.பி.எல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கவுதம்...

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !!

  இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து இளம் வீரரான ப்ரிதீவ் ஷா, முன்னாள் வீரர் சேவாக்கை போன்று...

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் !!

  ஐ.பி.எல் தொடர் வேண்டுமா..? வேண்டாமா..? வெளிப்படையாக பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெறாமல் இந்த ஆண்டு நிறைவடைவதை தன்னால் நினைத்து கூட...