பாகிஸ்தானுடன் விளையாடாமல் இருக்க ஐசிசியினால் மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்த முடியாது: பிசிசிஐ அதிகாரி 1

பாகிஸ்தானுடன் விளையாடாமல் இருக்க ஐசிசியினால் மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்த முடியாது என பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்றால் பிரச்னை இல்லை என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக வருகின்ற உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தான் அணியுடன் இந்தியா விளையாடலாமா? வேண்டாமா? என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தானுடன் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிசிசிஐ-யும் இதுதொடர்பாக ஐசிசியிடம் வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளது.

பாகிஸ்தானுடன் விளையாடாமல் இருக்க ஐசிசியினால் மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்த முடியாது: பிசிசிஐ அதிகாரி 2

இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடிய போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. அதனால் இந்திய அணி விளையாடி நிச்சயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். விளையாடாமல் பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகளை தாரை வார்த்துவிடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரின் கருத்து சவுரவ் கங்குலி பதிலடி கொடுத்துள்ளார். “பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெறவேண்டும் என்று சச்சின் கூறுகிறார். ஆனால், உலகக் கோப்பை வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகக் கோப்பையில் 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற எல்லா அணிகளுடன் மோதும். உலகக்கோப்பையின் ஒரே ஒரு போட்டியில் இந்தியா விளையாடவில்லை என்றால், அது ஒரு பிரச்னையாக இருக்காது” என்று காங்குலி கூறியுள்ளார்.Cricket, Virat Kohli, Pakistan, India, Champions Trophy

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியிடம் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி கேட்டபோது, ‘’பயங்கரவாதத் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு துணை நிற்போம். அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முடிவை மதிப்போம்” என்றார்.

முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் இதே கருத்தினை கூறி இருந்தார். “உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடினால் இந்தியாதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் விளையாடாமல் போனால், பாகிஸ்தான் வெற்றி பெறும்.

இதனால் அவர்கள் எளிதில் வாங்கும் இரண்டு புள்ளிகளை விடக்கூடாது. உலகக்கோப்பைப் போட்டியில் இதுவரை ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்துள்ளது. அதனால் பாகிஸ்தான் அணி போட்டியில் முன்னோக்கிச் செல்லாமல் இருக்க நாம் முட்டுக்கட்டை போட வேண்டும்.

ஆனால், பாகிஸ்தானுடன் விளையாடுவோமா என்ற கேள்விக்கு நான் நாட்டின் பக்கமே நிற்கிறேன். இந்திய அரசு என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்படுகிறேன். நாம் பாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியாவுக்குதான் இழப்பு” எனத் தெரிவித்து இருந்தார் கவாஸ்கர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *