டாஸ் எல்லாம் எங்களுக்கு முக்கியமே கிடையாது... இந்த திட்டத்தை வைத்து நியூசிலாந்தை வீழ்த்துவோம்; ஆரோன் பின்ச் ஓபன் டாக் !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்காது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் துபாயில் துவங்கியது.

இந்த தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

டாஸ் எல்லாம் எங்களுக்கு முக்கியமே கிடையாது... இந்த திட்டத்தை வைத்து நியூசிலாந்தை வீழ்த்துவோம்; ஆரோன் பின்ச் ஓபன் டாக் !! 2

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை (14ம் தேதி) நடைபெற உள்ளது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இரு அணிகளுமே இதுவரை டி.20 உலகக்கோப்பையை வெல்லாததால், இந்த போட்டிக்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.

டாஸ் எல்லாம் எங்களுக்கு முக்கியமே கிடையாது... இந்த திட்டத்தை வைத்து நியூசிலாந்தை வீழ்த்துவோம்; ஆரோன் பின்ச் ஓபன் டாக் !! 3

இரண்டு அரையிறுதி போட்டியிலும் டாஸ் வென்ற அணிகளே வெற்றி பெற்றுள்ளதால், இறுதி போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பின்சோ டாஸ் பற்றி கவலையில்லை என தெரிவித்துள்ளார்.

டாஸ் எல்லாம் எங்களுக்கு முக்கியமே கிடையாது... இந்த திட்டத்தை வைத்து நியூசிலாந்தை வீழ்த்துவோம்; ஆரோன் பின்ச் ஓபன் டாக் !! 4

இது குறித்து ஆரோன் பின்ச் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் டாஸ் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் விசயம் கிடையாது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நான் டாஸை இழக்க வேண்டும் என்று தான் நினைத்தேன், முதலில் பேட்டிங் செய்து அதிகமான ரன்கள் குவித்து அதன் மூலமே வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இறுதி போட்டியிலும் என எண்ணம் இதுவே. டாஸை இழந்துவிட்டால் போட்டியில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற அர்த்தம் இல்லை. ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இதே மைதானத்தில் தான் நடைபெற்றது, இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகமான ரன்களை குவித்துவிட்டு அதன் மூலம் மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்து அதிகமான ரன்கள் குவித்துவிட்டால் போதும் எதிரணிக்கு தானாக அதிக நெருக்கடி ஏற்பட்டுவிடும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published.