ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! புதிய நம்பர் 1 பேட்ஸ்மேன் ! 1

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் பல புதிய மாற்றங்கள் இந்த பட்டியலில் ஏற்பட்டிருக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்கா அணியை துவம்சம் செய்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

அணிகளின் தர வரிசை பட்டியலில் இங்கிலாந்து அணி அபாரமாக 275 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 275 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இடத்திலும் 266 புள்ளிகளுடன் இந்திய அணி 3-வது இடத்திலும் இருக்கிறது. கடைசியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் இருக்கின்றன.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! புதிய நம்பர் 1 பேட்ஸ்மேன் ! 2

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் புதிதாக இங்கிலாந்து அணியின் வீரர் டேவிட் மாலன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். இவர் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இரண்டு அரை சதங்கள் விளாசினார். மேலும் மூன்றாவது போட்டியில் 99 ரன்கள் அடித்தார். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்திருந்தார். இதன் மூலம் மிகச் சிறப்பாக விளையாடிய இவரின் தரவரிசை எகிறியது.

இத்தனை ஆண்டு காலம் முதல் இடத்தில் இருந்த பாபர் அசாம் தள்ளிவிட்டு விட்டு அந்த இடத்தை பிடித்திருக்கிறார் டேவிட் மாலன். மேலும் 915 புள்ளிகள் பெற்று புதிய சாதனையாக பதிவாகியிருக்கிறது. இதுவரை டி20 போட்டிகளில் ஆரோன் பின்ச் 2018 ஆம் ஆண்டு 900 புள்ளிகள் பெற்றது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்தது. தற்போது டேவிட் மாலன் 915 புள்ளிகள் பெற்று அந்த சாதனையை முறியடித்திருக்கிறார். இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 824 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் விராட் கோலி 673 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் ரோகித் சர்மா 662 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் இருக்கின்றனர்.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் அறிவிப்பு ! புதிய நம்பர் 1 பேட்ஸ்மேன் ! 3

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *