வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து இல்லை… டி.20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும்; முன்னாள் வீரர் கணிப்பு !! 1

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் உலக கோப்பை தொடர் சம்பந்தமான தனது கருத்துக்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெ தொடர் அக்.,17ம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் டி.20 உலகக்கோப்பையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிரமான திட்டங்களை தீட்டி வருகிறது.

மேலும் ஒவ்வொரு அணியின் முன்னாள் வீரர்களும் தங்களது அணி எப்படியாவது கோப்பையை வென்று விட வேண்டுமென்று பல ஆலோசனைகளை தங்களது அணிக்கு கொடுத்து வருகின்றனர், மேலும் உலக கோப்பை தொடர் நெருங்க நெருங்க அது சம்பந்தமான கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து இல்லை… டி.20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும்; முன்னாள் வீரர் கணிப்பு !! 2

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இந்திய அணி குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, மேலும் என்னுடைய ஃபேவரைட் அணியும் இந்திய அணி தான் என்று தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து இல்லை… டி.20 உலகக்கோப்பையை இந்த அணி தான் வெல்லும்; முன்னாள் வீரர் கணிப்பு !! 3

மேலும் பேசிய அவர், கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை எந்த ஒரு பலமான அணியாக இருந்தாலும் வெற்றி பெறுவது என்பது அந்த சமயத்தில் தான் அமையும், நீங்கள் ஒரு மிகப்பெரிய பலமான அணியாக இருக்கலாம் ஆனால் முக்கியமான சமயத்தில் எடுக்கும் சில தவறான முடிவுகளில் மூலம் உங்களது அணி தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, அப்படி தவறு செய்யும் அணி எப்பேர்பட்ட அணியாக இருந்தாலும் அதனால் நிச்சயம் கோப்பையை வெளியே முடியாது ஒருவேளை அந்த அணி ஒரு ரன்களில் தோல்வியை தழுவ லாம் அல்லது 20 ரன்கள் தோல்வியைத் தழுவலாம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நிச்சயம் அனைத்து அணைகளுக்கும் ஒரு மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *