இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுத்து பாருங்க... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 1

உம்ரான் மாலிக்கை விளையாட வையுங்கள் என்று இந்திய அணிக்கு இர்பான் பதான் அறிவுரை வழங்கியுள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் புகழின் உச்சிக்கே சென்ற இந்திய அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், தன்னுடைய அசுர வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சின்னாபின்னமாக சிதறடித்தார்.

இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுத்து பாருங்க... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 2

மிக எளிதாக 150+kmph வேகத்தில் பந்து வீசும் திறமை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 14 போட்டிகளில் அதிவேக பந்து வீசி 14 வேகமான பந்திர்கான அவார்டை பெற்றுள்ளார்.மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 157 kmph வேகத்தில் பந்து வீசி அதிவேகமான பந்து என்ற இடத்தில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.முதல் இடத்தில் லக்கி பெர்குசன் 157.3kmph இடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுத்து பாருங்க... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 3

ஆனால் இவர் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை, இவரை ஒரு போட்டியிலாவது விளையாட வைத்து பரிசோதித்து பார்த்திருக்கலாம் என்று பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

 

அந்தவகையில் உலக கோப்பை தொடருக்கு முன் உம்ரான் மாலிக்கை சர்வதேச போட்டியில் விளையாட வையுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்த பையனுக்கு ஒரு வாய்ப்பாவது கொடுத்து பாருங்க... இந்திய அணியிடம் கோரிக்கை வைக்கும் இர்பான் பதான் !! 4

இதுகுறித்து அவர் பேசுகையில், “உம்ரான் மாலிக் இன்னும் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் கூட விளையாடவில்லை, முதலில் அவரை சர்வதேச போட்டியில் அறிமுகம் செய்யுங்கள் அப்படி செய்தால்தான் அவரிடம் என்ன திறமை உள்ளது என்பது நமக்கு தெரியும், நம்மிடம் 150 kmph வேகத்தில் பந்து வீசும் பந்து வீச்சாளர் ஒருவர் கூட கிடையாது, இதனால் அவரை மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும், அவரின் நிலைத் தன்மையையும் உடற்தகுதியும் எந்தளவுக்கு உள்ளது என்று பரிசோதித்துப் பார்க்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளரிடம் எப்படி பந்தை வேகமாக வீச வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்க முடியாது, அது இர்பான் பதானாக இருந்தாலும் சரி, அல்லது உலகின் தலை சிறந்த ஆலோசகர் மற்றும் பயிற்சியாளராக இருந்தாலும் சரியே.. நம்மால் செய்ய முடிந்ததெல்லாம் அவரை சிறந்த முறையில் மெருகேற்றுவது மட்டும்தான் அதை தான் நம்மால் செய்ய முடியும். தற்போது உம்ரான் மாலிக்கை நாம் விளையாட வைக்க வேண்டும், அவர் நன்றாக விளையாடினால் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால் அவரை தயார்படுத்த வேண்டும், அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளர் அனைத்து காலகட்டத்திலும் கிடைத்து விட மாட்டார்” என்று இர்பான் பதான் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment

Your email address will not be published.