ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 1

முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

மாடர்ன் டே கிரிக்கெட் என அழைக்கப்படும் டி20 தொடர், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களை விட ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

20 ஓவர்களை கொண்ட இந்த தொடரில் முதல் பந்திலிருந்தே போட்டியின் விறுவிறுப்பு ஆரம்பமாகிவிடும் என்பதால் இந்த தொடரில் பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு பல்வேறு பரிணாமங்களில் (ஐபிஎல்,தி 100) உருவெடுத்துள்ளது.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 2

குறிப்பாக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடர்போலவே டி20 தொடரிலும் உலகக் கோப்பை நடத்தப்படுகிறது. டி20 தொடர் ஆரம்பித்த முதலில் இது உண்மையான கிரிக்கெட்டிற்கு பங்கம் விளைவிக்கும் என்று கடுமையான எதிர்ப்பு வந்த நிலையில் தற்போது டி20 தொடருக்கான அங்கீகாரம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் 2022 உலகக்கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருப்பதால் அது குறித்தான சுவாரசியமான தகவல்கள் தெரியப்படுத்தி வருகின்றது.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 3

குறிப்பாக எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார்கள், எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி தகுதி சுற்றுக்கு முன்னேறும்,டி20 தொடருக்கான சிறந்த ஆடும் லெவன் என்று பல்வேறு விதமான கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆடம் கில்கிரிஸ்ட் டி20தொடரில் சிறப்பாக செயல்படும் உலகின் தலைசிறந்த ஐந்து வீரர்களை தேர்வு செய்துள்ளார்.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 4

முதன்முதலில் அவர் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னரை தேர்ந்தெடுத்துள்ளார். டேவிட் வார்னர் குறித்து பேசுகையில், “டேவிட் வார்னர் சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன், அவருடைய அட்டாக்கிங் ஆட்டிட்யூட் மற்றும் அவருடைய ஓபனிங் இன்னிங்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது, அவர் தன்னம்பிக்கையாக செயல்பட்டதை நாம் கடந்த உலக கோப்பை தொடரிலேயே கண்டிருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 5

இரண்டாவதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை தேர்ந்தெடுத்துள்ளார். பாபர் அசாம் மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட கூடியவர் குறிப்பாக t20 போட்டியில் எந்த ஒரு மைதானமாக இருந்தாலும் அதில் சிறப்பாக செயல்படுகிறார் என்று பாராட்டி பேசிள்ளார்.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 6

மூன்றாவதாக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா குறித்து பேசுகையில்,“ ஹர்திக் பாண்டியா மிகவும் அதிரடியாக செயல்படுகிறார்.பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். நிச்சயம் அவர் இல்லாமல் எப்படி” என்று ஹர்திக் பாண்டியாவை பாராட்டி பேசியுள்ளார்.

ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 7

இவரைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானை தேர்ந்தெடுத்துள்ளார். “டி20 தொடரின் சிறந்த வீரர் என்ற வரிசையில் ரஷீத் கான் இல்லாமல் எப்படி என்று கேள்வி எழுப்பிய கில்கிரிஸ்ட், t20 தொடரில் உலகெங்கும் நடக்கும் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை ரஷீத் கான் வெளிப்படுத்தி வருகிறார்” என்று பாராட்டி பேசி உள்ளார்.ஒரு இந்திய வீரருக்கு இடம்... தலைசிறந்த ஐந்து டி.20 வீரர்களை தேர்வு செய்து அறிவித்த சேன் வாட்சன் !! 8

 

மேலும் ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லரை தேர்ந்தெடுத்துள்ளார். ஜாஸ் பட்லர் குறித்து ஆடம் கில்கிரிஸ்ட் தெரிவித்ததாவது என்னைப் பொருத்தவரையில் ஜாஸ்பட்லர் மிகச் சிறந்த வீரர். அவருடைய தைரியம் மற்றும் பேட்டிங் பவர் மிகச் சிறப்பாக உள்ளது. குறிப்பாக இவர் t20 போட்டிகளில் மிக அறிவிப்பூர்வமாக செயல்படுகிறார்” என்று பாராட்டி பேசுயிருந்தார்.

Leave a comment

Your email address will not be published.