பும்ராஹ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர் தான்; பயிற்சியாளர் உறுதி !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஸ்வேந்திர சாஹலின் பங்களிப்பு இந்திய அணிக்கு முக்கியமானதாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த டி.20 உலக்கக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல தகுதியான அணிகளில் முதன்மையான அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, படு மோசமான தோல்விகளால் லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறியது. இதனால் இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை கட்டமைப்பதில் பிசிசிஐ., பெரும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த தொடரில் செய்த தவறுகளை மீண்டும் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்திய அணி, சீனியர் வீரர்களை விட சமீபகாலமாக இளம் வீரர்கள் பலருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கி வருகிறது.

பும்ராஹ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர் தான்; பயிற்சியாளர் உறுதி !! 2

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வருவதால், முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கர், யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

பும்ராஹ் இல்லை... டி.20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் துருப்பு சீட்டு இவர் தான்; பயிற்சியாளர் உறுதி !! 3

இது குறித்து சஞ்சய் பங்கர் பேசுகையில், “யுஸ்வேந்திர சாஹலுக்கு இதுவரை உலகக்கோப்பை தொடர்களில் பெரிதாக வாய்ப்பு கிடைத்தது இல்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் இந்த வருடத்திற்கான உலகக்கோப்பை தொடரில் நிச்சயமாக யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியின் துருப்பு சீட்டாக திகழ்வார். அணில் கும்ப்ளேவிற்கு பிறகு, ஒவ்வொரு போட்டியிலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுக்கும் லெக் ஸ்பின்னர் என்றால் அது யுஸ்வேந்திர சாஹல் தான், நீண்டகாலமாக எந்த லெக் ஸ்பின்னராலும் சில வருடங்கள் கூட தாக்குபிடிக்க முடியவில்லை. ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய சாஹல், ஆஸ்திரேலிய மண்ணிலும் மிக சிறப்பாக செயல்படுவார் என முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.