Kolkata: India's bowler Kuldeep Yadav celebrates his hat trick against Australia during 2nd ODI cricket match at Eden Garden in Kolkata on Thursday. PTI Photo by Ashok Bhaumik (PTI9_21_2017_000201B) *** Local Caption ***
ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி, பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் ஆகியோர் இரண்டாம் இடத்தில் உள்ளனர். ஐசிசி அவ்வப்போது டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள், பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே திங்கள்கிழமை வெளியிட்ட பட்டியலின்படி அணிகள் பிரிவில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தியா. அதே நேரத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பந்துவீச்சாளர்கள் பிரிவில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார். ஆப்கன் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார். அவரது சக வீரர் யுஜவேந்திர சஹல் 6 இடங்கள் பின்தள்ளப்பட்டு 17-ஆம் இடத்திலும், புவனேஸ்வர் குமார் 18-ஆம் இடத்திலும் உள்ளனர். க்ருணால் பாண்டியா 58-ஆம் இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரோஹித் சர்மா 7-ஆவது இடத்தில் உள்ளார். இளம் வீரர் கேஎல்.ராகுல் 10-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார். தவன் 11-ஆவது இடத்திலும், கேப்டன் விராட் கோலி நியூஸி தொடரில் ஆடாததால், 4 இடங்கள் தள்ளப்பட்டு 19-ஆம் இடத்தில் உள்ளார். நியூஸிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்ஸன் 12-ஆம் இடத்திலும், ராஸ் டெய்லர் 7 இடங்கள் முன்னேறி 51-ஆம் இடத்திலும், டிம் சைபெஃர்ட் 83-ஆம் இடத்திலும், பந்துவீச்சாளர் டிம் செளதி 30-ஆம் இடத்திலும் உள்ளனர். T20I அணி தரவரிசை
நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடு
1 பாக்கிஸ்தான் 36 4979 138
2 இந்தியா 42 5298 124
3 இங்கிலாந்து 22 2586 118
4 ஆஸ்திரேலியா 28 3266 117
5 தென் ஆப்பிரிக்கா 22 2502 114
6 நியூசிலாந்து 26 2940 113
7 மேற்கிந்திய தீவுகள் 27 2725 101
8 ஆப்கானிஸ்தான் 27 2490 92
9 இலங்கை 30 2580 86
10 வங்காளம் 30 2321 77
* 2019 பிப்.11 அன்று புதுப்பிக்கப்பட்டது

T20I பேட்ஸ்மேன் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 பாபர் ஆஸம் பாக்கிஸ்தான் 858
2 கொலின் மன்ரோ நியூசிலாந்து 809
3 ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா 806
4 எவின் லீவிஸ் மேற்கிந்திய தீவுகள் 751
5 பகர் ஜமான் பாக்கிஸ்தான் 749
6 க்ளென் மாக்ஸ்வெல் ஆஸ்திரேலியா 745
7 ரோஹித் ஷர்மா இந்தியா 719
8 அலெக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து 697
9 மார்டின் குப்டில் நியூசிலாந்து 691
10 லோகேஷ் ராகுல் இந்தியா 689
* 2019 பிப்.11 அன்று புதுப்பிக்கப்பட்டது

டி 20 பவுலர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் 793
2 குல்தீப் யாதவ் இந்தியா 752
3 ஷாத் கான் பாகிஸ்தான் 714
4 ஈஷ் சோதி நியூசிலாந்து 676
5 அடில் ரஷீத் இங்கிலாந்து 676
6 ஆடம் சாம்பா ஆஸ்திரேலியா 670
7 ஷகிப் அல் ஹசன் வங்காளம் 658
8 பகீஷ் அஷ்ரஃப் பாக்கிஸ்தான் 652
9 இமாத் வாசிம் பாக்கிஸ்தான் 651
10 இம்ரான் தாஹிர் தென் ஆப்பிரிக்கா 640
* 2019 பிப்.11 அன்று புதுப்பிக்கப்பட்டது

T20 ஆல் ரவுண்டர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 க்ளென் மாக்ஸ்வெல் ஆஸ்திரேலியா 362
2 ஷகிப் அல் ஹசன் வங்காளம் 338
3 முகம்மது நபி ஆப்கானிஸ்தான் 313
4 மஹ்மதுல்லா வங்காளம் 240
5 திசரா பெரேரா இலங்கை 219


  • SHARE

    விவரம் காண

    டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

    டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

    பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

    பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

    பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

    பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

    ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

    ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

    அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

    புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...