ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு: மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்! 1

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி ஐசிசியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வங்காளதேச அணிக்கெதிரான ஆட்டத்தில் முகமது ஷமி அபாரமான வகையில் பந்து வீசினார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதனால் ஐசிசி தரவரிசையில் 790 புள்ளிகள் பெற்று 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன் இந்திய பந்து வீச்சாளர்களில் கபில்தேவ் (877), பும்ரா (832) ஆகியோர் அதிக புள்ளிகள் பெற்றிருந்தனர். அதன்பின் முகமது ஷமி தற்போது 790 புள்ளிகள் பெற்றி 3-வது இடத்தில் உள்ளார்.ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு: மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்! 2

அஸ்வின் 10-வது இடத்திலும், இஷாந்த் சர்மா 20-வது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இரட்டை சதம் (243) அடித்த மயங்க் அகர்வால் பேட்ஸ்மேன் தரவரிசையில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 2-வது இடத்திலும், புஜாரா 4-வது இடத்திலும், ரகானே 5-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் சர்மா 10-வது இடத்தில் உள்ளார்.

முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் அதிகமான ரன்களைச்சேர்த்தவர்களில் இதுவரை 7 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்தார்கள். இப்போது 8-வதாக அகர்வால் சேர்ந்துள்ளார். டான்பிராட்மன்(1,210), எவர்டன் வீக்ஸ்(968), சுனில் கவாஸ்கர்(938), மார்க் டெய்லர்(906), ஜார்ஜ் ஹெட்லி(904), பிராங் வோரல்(890), ஹெர்பெட் சட்கிளிப்(872) ஆகியோர் இருந்தார்கள். இப்போது அகர்வால் இணைந்துள்ளார்

இதுதவிர இசாந்த் சர்மா(20-வது இடம்), உமேஷ் யாதவ்(22-வதுஇடம்) ஆகியோர்தலா ஒரு இடத்துக்கு முன்னேறியுள்ளார்கள். ரவிந்திர ஜடேஜா 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல் அறிவிப்பு: மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்! 3

பந்துவீச்சாளர்கள் வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் அஸ்வின், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் 4-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவரும் இந்திய அணி இதுவரை 300 புள்ளிகளைக் குவித்துள்ளது. இலங்கை, நியூஸிலாந்துஅணிகள் தலா 60 புள்ளிகளுடனும், இங்கிலாந்து, ஆஸ்திரேலய அணிகள் 56 புள்ளிகளுடனும்உள்ளன.
பாகிஸ்தான் தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்த வார இறுதியில் ஆஸ்திரேலியஅணியுடன் விளையாட உள்ளது. இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் பிரிஸ்பேனிலும், 2-வது ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாகவும் நடக்கிறது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *