ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இங்கிலாந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது, இந்தியா தொடர்ந்து முதல் இடம் 1

தற்போது ஐசிசி உலக டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது இதில் இந்திய அணி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது, தென் ஆப்பிரிக்காவை வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா விளையாடிய டெஸ்ட் தொடரில் 3 -1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா விளையாடிய போட்டியின் விவரம் :

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து.

மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து, தனது முதல் இன்னிங்ஸில் 108.4 ஓவர்களில் 362 ரன்கள் குவித்தது. அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் 99, பென் ஸ்டோக்ஸ் 58, ஜோ ரூட் 52 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய தென் ஆப்பிரிக்கா 72.1 ஓவர்களில் 226 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் டெம்பா பெளமா 46, ஆம்லா 30 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இங்கிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 66.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது.

4-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 69.1 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் சேர்த்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் மோர்ன் மோர்கல் 4 விக்கெட்டுகளையும், ஆலிவர் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : இங்கிலாந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது, இந்தியா தொடர்ந்து முதல் இடம் 2

380 ரன்கள் இலக்கு: இதையடுத்து 380 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர் 5, குன் 11, டெம்பா பெளமா 12 ரன்களில் ஆட்டமிழக்க, 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து ஆம்லாவுடன் இணைந்தார் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் குவித்தது. ஆம்லா 159 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் சேர்த்து வெளியேற, மீண்டும் சரிவுக்குள்ளானது தென் ஆப்பிரிக்கா.

பின்னர் வந்த டி காக் 1 ரன்னிலும், டி புரூன் ரன் ஏதுமின்றியும் வெளியேற, கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் 61 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் வந்த ரபாடா 1 ரன்னில் ஆட்டமிழக்க, மோர்கல், ஆலிவர் ஆகியோர் டக் அவுட் ஆயினர். இதனால் 62.5 ஓவர்களில் 202 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா. இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றது இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ஐசிசி தரவரிசை பட்டியல் :

Rank Country Points
1 India 123
2 South Africa 110
3 England 105
4 Australia 100
5 New Zealand 97
6 Pakistan 93
7 Sri Lanka 92
8 West Indies 75
9 Bangladesh 69
10 Zimbabwe 0

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *