Cricket, ICC, Test Cricket, Test Championship

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை 1975ஆம் ஆண்டு முதல் நடைபெறுகிறது. டி20 போட்டிகள் அறிமுகமாகி, பிரபலமடையத் தொடங்கியதும் டி20 உலகக் கோப்பை 2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. டி20 போட்டிகளின் வருகைக்குப்பின் ஐபிஎல் போன்ற லீக் தொடர்கள் அதிகரித்து ஒருநாள் போட்டிகளுக்குக் கூட மவுசு குறைந்துள்ளது.

ஒருநாள் போட்டியில் அணிகள் எளிதாக 300 ரன்களைக் கடப்பதும் டி20 போட்டிகளின் தாக்கத்தினால் சகஜமாகிவிட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், ஒருநாள் போட்டிகளின் கடைசி 10 ஓவர்கள் டி20 போட்டிக்கான பரபரப்புடன் இருக்கிறது.

ஆனால், 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக, முதல் முதலில் தோன்ற கிரிக்கெட் விளையாட்டு வடிவமான டெஸ்ட் போட்டிகளின் செல்வாக்கை அதிகரிக்க பகல் இரவு போட்டிகள் போன்ற புதுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்சூழலில், விடாப்பிடியான டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆதரவைப் பெருக்கவும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது பற்றி ஐசிசி முடிவுசெய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடைபெற்ற ஐசிசி சிறப்புக் கூட்டத்தில் இது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. கிடைத்துள்ள தகவலின் படி, டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் 2019ஆம் ஆண்டு தொடங்கி, இரண்டு ஆண்டுகள் நடக்கும் நீண்ட தொடராக இருக்கும். 9 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு இடையில் இறுதிப்போட்டி நடக்கும். இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படும். கூடிய விரைவில் டெஸ்ட் உலகக் கோப்பை பற்றிய ஐசிசியின் அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *