U19 உலகக்கோப்பை 2018: இந்திய அணியை பாராட்டிய கவுதம் கம்பிர் 1

அடுத்த தலைமுறைக்கான இந்திய கிரிக்கெட் அணியை சத்தமே இல்லாமல் உருவாக்கி கொடுத்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தில் நடைபெற்றது.

இதில் உலக சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று பேய் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

U19 உலகக்கோப்பை 2018: இந்திய அணியை பாராட்டிய கவுதம் கம்பிர் 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 47.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 216 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 217 ரன்கள் எடுத்தால் என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இளம் இந்திய அணிக்கு துவக்க வீரரும் கேப்டனுமான பிரிதீவ் ஷா 29 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் வந்த சுப்மன் கில் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதனையடுத்து கூட்டணி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் மன்ஜோட் கல்ரா – விக்கெட் கீப்பர் தேஷாய் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்து மளமளவென ரன் குவித்தது.

U19 உலகக்கோப்பை 2018: இந்திய அணியை பாராட்டிய கவுதம் கம்பிர் 3

மன்ஜோட் கல்ரா 101 பந்தில் சதம் அடித்து அசத்தினார், மறுமுனையில் தேஷாயும் வெற்றிக்கு 1 ரன் தேவைபட்ட நிலையில் தோனி ஸ்டைலில் பவுண்டரி அடித்து 47 ரன்கள் குவித்ததன் மூலம் 38.5 ஓவரில் 220 ரன்கள் எடுத்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில், நான்காவது முறை U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டினார் இந்திய வீரர் கவுதம் கம்பிர் !

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *