1983 ம் ஆண்டு உலகக்கோப்பையை நினைவு கூர்ந்த ரவி சாஸ்திரி

உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. நேற் றுடன் இந்திய அணி முதல் முறை யாக கோப்பையை வென்று 36 வருடங்களாகிறது. இந்த நினைவுகளை தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாள ராக உள்ள ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்டார்.

இதுதொடர்பாக ரவி சாஸ்திரி கூறுகையில், “1983-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை மான் செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்ஃபோர்டு மைதானத்தில் இருந்துதான் தொடங்கினோம். தொடக்க நாளில் நடைபெற்ற முதல் ஆட்டத்திலேயே மேற்கிந்தியத் தீவு களை வீழ்த்தினோம். அந்த அணி யானது அதற்கு முன்னர் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் வீழ்த்தப்பட்டது கிடையாது.

அதன் பின்னர் இந்த மைதானம் பெரிய அளவில் மாற்றம் கண்டுவிட்டது. அப்போது ஆடுகளத்தின் பின்புறம் ரயில் தண்டவாளம் இருந்தது. அதை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன். முதல் ஆட்டத்தின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜோயல் கார்னர் விளாசிய பந்து ஒன்று ரயில் தண்டவாளத்தின் மீது விழுந்தது.

அந்த ஆட்டத்தின் கடைசி விக்கெட்டை நான் கைப்பற்றிய தையும் ஒருபோதும் மறக்க மாட் டேன். அந்த வெற்றி தான் தொடக்க மாக இருந்தது. ஒருமுறை மேற்கிந் தியத் தீவுகள் அணியை வீழ்த்திய தால், எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை அந்த ஆட்டம் எங்களுக்கு தந்தது.

அதன் பின்னர் எங்களை எதுவும் தடுக்கவில்லை. மீண்டும் இதே மைதானத்துக்கு திரும்பவும் வந்திருப்பது சிறப்பான விஷயம். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட்டின் முகம் மாறியது” என்றார். • SHARE

  விவரம் காண

  இவர்தான் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் – கசிந்த தகவல்

  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு யார் வரப்போகிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்தியன் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ரவிசாஸ்திரியின்...

  தோனியை கிண்டலடிக்க உனக்கு என்ன தகுதி? இங்கிலாந்து வீரரை விளாசிய ரசிகர்கள்!!

  தோனியின் இராணுவ முடிவு குறித்து கிண்டலடித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர்கள் டேவிட் லாய்டை ட்விட்டரில் பொரிந்து தள்ளியுள்ளனர் ரசிகர்கள். உலகக் கோப்பை...

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? தோனியை கிண்டலாகப் பேசிய இங்கிலாந்து வீரர்!!

  இவரெல்லாம் ராணுவத்துக்கு போறாரா? என்ற வண்ணம் தோனியை கிண்டலடித்துள்ளார் இங்கிலாந்து முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் டேவிட் லாய்டு. உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு...

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் !!

  சத்தியமா அதுக்கு கே.எல் ராகுல் தான் காரணம்; உண்மையை உடைத்த தேர்வுக்குழு தலைவர் கே.எல் ராகுல் கேட்டு கொண்டதற்காகவே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய...

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் !!

  சுப்மன் கில்லிற்கு ஏன் இடம் இல்லை..? புதிய விளக்கம் கொடுக்கும் எம்.எஸ். கே பிரசாத் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3...