இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியில் வங்கதேச அணியின் மூத்த வீரர் மகமதுல்லா காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் இரு அணிகளும் மோதுகின்றன. 7 போட்டிகளில் மூன்றில் வென்று 7 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி புள்ளி போட்டிகளில் 7வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவுடனான போட்டியில் பங்களாதேஷ் அணி வெல்லும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளலாம். அதேபோல் இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு நுழையும் இரண்டாவது அணியாக இருக்கும். இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கையில் பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் மஹமதுல்லா காயம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டார். அதில், “இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மஹமதுல்லா ஆடுவார் என்பதில் சந்தேகம் தான்” என்றார்.
பங்களாதேஷ் அணியின் நடு வரிசைக்கு பலம் சேர்க்கும் ஒரு வீரராக மஹமதுல்லா கடந்த சில வருடங்களில் பேட்டிங் மூலம் நிரூபித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையிலும் ஓரிரு போட்டிகளில் அதனை செய்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது பின்னங்காலின் கீழ் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து பாதியில் இருந்து வெளியேறினார். அதேபோல் பேட்டிங்கிலும் மிகவும் சிரமப்பட்டு வெறும் 27 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். தற்போது இந்திய அணிக்கு எதிரான கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டியில் முழு உடல் தகுதி பெறாததால் ஆடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது வங்கதேச அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.
இதற்க்கு அடுத்து பாகிஸ்தான் அணியுடனும் வங்கதேச அணிக்கு ஒரு போட்டி இருக்கிறது. அதற்குள்ளும் மஹமதுல்லா குணமடைவது சந்தேகம் என வங்கதேச அணியின் உடல்தகுதி ஆலோசகர் கூறியுள்ளார்.