உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஆடவெண்டும் - ஆஸ்திரேலியா ஜாம்பவான் கருத்து 1

வருகின்ற உலககோப்பை தொடரில் இந்திய அணியின் 15பேர் கொண்ட குழுவில் தினேஷ் கார்த்திக் ஆட வேண்டும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் துவக்க வீரர் மற்றும் சென்னை அணியும் முன்னாள் வீரருமான மிக்கேல் ஹஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டில் பெரும் தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆதலால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒவ்வொரு நாட்டின் அணியிலும் தங்களுக்கு சரியென பட்ட 15 வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், மைக் ஹஸ்ஸின் இந்திய அணியில் பலம் வாய்ந்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இது தான் என வெளியிட்டுள்ளார்.

டாப் ஆர்டரில் ரோகித் சர்மா, ஷிகார் தவான், கேல் ராகுல்:

உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஆடவெண்டும் - ஆஸ்திரேலியா ஜாம்பவான் கருத்து 2

இந்திய அணியில் நிறைய வீரர்கள் எவ்வித சந்தேகமும் இன்றி நேரடியாக உலகக் கோப்பை அணியில் நுழைவார்கள் என்று மைக்கேல் ஹசி உணர்கிறார். மேலும், அவர் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோரை தொடர்ந்து ராகுல் மீது தனது நம்பிக்கையை கொண்டிருக்கிறார். துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி கலக்குவார் என ஆதரவும் தெரிவித்துள்ளார்.

மைக்கேல் ஹஸ்ஸியை ஈர்த்த அம்பத்தி ராயுடு..

4வது இடத்திற்கு தடுமாறி வரும் இந்திய அணிக்கு அம்பத்தி ராயுடு சரியாக இருப்பர் என ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சென்னை அணிக்காக ராயுடு சிறப்பாக ஆடியதை தான் நன்கு கவனித்ததாக அவர் கூறினார்.

டோனி, தினேஷ் கார்த்திக் – விக்கெட் கீப்பர்கள்:

உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஆடவெண்டும் - ஆஸ்திரேலியா ஜாம்பவான் கருத்து 3

பிசிசிஐ க்கு பெரும் தலைவலியாக இருப்பது , உலககோப்பையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பந்த் இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது தான். இருப்பினும் ஹஸ்ஸி, தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரின் அனுபவம் மற்றும் வேகம் நிச்சயம் இந்திய அணிக்கு உதவும் எனவும் கூறினார்.

ஆல்ரவுண்டர் வரிசையில் , ஹர்திக் பாண்டியா சரியாக இருப்பார் என உணர்கிறார்.

ஸ்பின்னர் பிரிவில்: யூசுவெந்திர சஹால், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா

உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஆடவெண்டும் - ஆஸ்திரேலியா ஜாம்பவான் கருத்து 4
India’s Kuldeep Yadav (R), Yuzvendra Chahal (front L) and wicketkeeper Mahendra Singh Dhoni (C) celebrate after New Zealand’s Lockie Ferguson was stumped during the first one-day international (ODI) cricket match between New Zealand and India at McLean Park in Napier on January 23, 2019. (Photo by Marty MELVILLE / AFP) (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)

கடந்த சில இந்திய அணிக்கு சஹால் மற்றும் குலடீப் பங்களிப்பு மிக அதிகமாகவே உள்ளது. தொடர்களில் வெற்றிக்கும் வித்திட்டுள்ளது. ஆதலால், அவர்களுக்கு மாற்றே இல்லை. மேலும், ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமல்ல, பீல்டிங் மற்றும் பேட்டிங் இரண்டிலும் உதவியாக இருப்பர் என ஹஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.

வேகப்பந்துவீச்சு பிரிவில்: சமி, பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார்

உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஆடவெண்டும் - ஆஸ்திரேலியா ஜாம்பவான் கருத்து 5
HYDERABAD, INDIA – MARCH 02: Mohammed Shami of India celebrates taking the wicket of Glenn Maxwell of Australia during game one of the One Day International series between India and Australia at Rajiv Gandhi International Cricket Stadium on March 02, 2019 in Hyderabad, India. (Photo by Robert Cianflone/Getty Images)

பும்ரா பந்துவீச்சு பற்றி அனைவரும் அறிந்ததே. புவி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தாலும், தற்போது மீண்டு வந்து சிறப்பாக செயல்படுகிறார். சமி வேகம் நாளுக்கு நாள் சீராக இருக்கிறது. விக்கெடுகள் வீழ்த்துவதிலும் கவனம் செலுத்துகிறார். ஆதலால் என் அணியில் இவர்களுக்கு இடம் என ஹஸ்ஸி கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *