உலகக்கோப்பை இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் அறிவிப்பு!! பட்டியல் இதோ.. 1

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு சொல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று இந்திய அணியின் தேர்வாளர் எம் எஸ் கே பிரசாத் வெளியிட்டார். அதேபோல, காயம் ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ள கூடுதலாக இரு வேகப்பந்து வீச்சாளர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று வெளியான 15 பேர் கொண்ட உலக கோப்பைக்கு செல்லும் இந்திய வீரர்களின் பட்டியல் பலரிடம் பெரும் வரவேற்பை பெற்றாலும் அதை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

உலகக்கோப்பை இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் அறிவிப்பு!! பட்டியல் இதோ.. 2
India’s Khaleel Ahmed celebrates the dismissal of West Indies’ batsman Marlon Samuels during the third one-day international cricket match between India and West Indies in Pune, India, Saturday, Oct. 27, 2018. (AP Photo/Rajanish Kakade)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. அதேபோல, அணியில் இடம் பெறுவது சந்தேகம் என எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். விஜய் சங்கர் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக அணியில் இடம்பெற்றுள்ளார். ரிஷப் பண்ட் சமீபத்தில் சிறப்பாக ஆடி வந்தாலும், ஏன் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறித்து தேர்வாளர் எம் எஸ் கே பிரசாத் விளக்கம் தெரிவித்து இருந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பெற்ற மற்றும் ஆஸ்திரேலிய தொடருக்கு எதிராக நன்கு ஆடிய ரவீந்திர ஜடேஜா உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சில் அணிக்கு புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய தொடர் என மூன்று தொடர்களிலும் சிறப்பாக பந்து வீசிய முகமது சமி இடம்பெற்றிருப்பது இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்.

உலகக்கோப்பை இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர்கள் அறிவிப்பு!! பட்டியல் இதோ.. 3

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயம் அடைந்து வருவதால் உலக கோப்பை தொடரில் அவர்கள் காயம் அடைந்து விட்டால் அவர்களுக்கு பதிலாக களமிறங்குவார்கள் என இரண்டு மாற்று வீரர்களை அறிவித்துள்ளது தேர்வுக்குழு.

அந்த மாற்று வீரர்கள் பட்டியலில் இளம் வீரர் கலீல் அஹமது மற்றும் நவதீப் சைனி இருவரும் உள்ளனர். இதில் முதல் தேர்வாக கலீல் அஹமது இடம் பெறுகிறார்.

ஏதாவது ஒரு வீர கடுமையாக காயம் அடையும் பட்சத்தில் மட்டுமே ஐசிசி ஒப்புதலின் பெயரில் கலீல் அஹ்மது இடம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *