உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸம்பா பந்தை சேதப்படுத்தவில்லை என்று அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் விளக்கம் அளித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றுமுன்தினம் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸம்பா பந்துவீசினார். இந்த ஆட்டத்தின் போது ஸம்பாவின் சில நடவடிக்கைகள் பலருக்கு சந்தேகத்தை எழுப்பின. ஒரு ஓவரில் அவர், பந்து வீசுவதற்கு முன்பாக தன்னுடைய பேண்ட் பாக்கெட்டுக்குள் அடிக்கடி கையை விட்டு எடுத்தார். பின்னர் அவர் தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒன்றை எடுத்து பந்தின் மீது வைப்பது போன்று வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. பந்தின் தன்மையை மாற்றுவதற்காக உப்புத்தாளை கொண்டு ஸம்பா தேய்த்தாரா என்று சமூக வலைதளங்களில் காரசாரமாக விவாதம் செய்யப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், பான் கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய பிரச்சினையில் சிக்கி தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடம் ஸம்பாவின் செயலும் பந்தை சேதப்படுத்தும் செயல்தான் என்று சிலர் சந்தேகம் எழுப்பினர்.

இதுகுறித்து கேப்டன் ஆரோன் பின்ச் கூறும்போது, “ஆடம் ஸம்பா தனது பேண்ட் பாக்கெட்டில் “ஹேண்ட் வார்மர்” என்ற பொருளை வைத்துக் கொண்டு, கைகளை சூடாக்கி கொண்டு பின்னர் பந்து வீசுவார். வேறு ஒன்றுமில்லை. அவர் பந்தை சேதப்படுத்திவில்லை” என்றார்.

Australia’s Alex Carey plays a shot during the 2019 Cricket World Cup group stage match between India and Australia at The Oval in London on June 9, 2019. (Photo by Adrian DENNIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read ADRIAN DENNIS/AFP/Getty Images)

நான் இன்னும் நீங்கள் குறிப்பிடும் புகைப்படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், ஆடம் சாம்பா உள்ளங்கைகளை உஷ்ணப்படுத்தும் கையடக்க வார்மரை பயன்படுத்துவது வழக்கம். ஒவ்வொரு ஆட்டதிலும் அவர் இதனைப் பயன்படுத்துவார். எனவே இதில் எந்தவித கருத்தையும் நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று விளக்கமளித்தார்.

பின்ச் அளித்த விளக்கத்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.-

   • SHARE

    விவரம் காண

    கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

    கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

    அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

    அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

    இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

    தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

    ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

    ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...