ஜடேஜாவை தொடர்ந்து சஞ்சய் மஞ்ரேக்கரை வச்சு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!! 1

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வர்ணனை குறித்து சமீபகாலமாகப் பலரும் விமரிசனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவர் ஒரு பக்கச் சார்பு நிலையுடன் பேசுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஐபிஎல் போட்டியின்போது மும்பைக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்கிற விமரிசனங்கள் அதிகமாக எழுந்தன.

அதேசமயம் ஐபிஎல்-லில் மட்டுமல்லாமல் உலகக் கோப்பைப் போட்டியிலும் தோனியைக் கடுமையாக விமரிசனம் செய்வதாக ரசிகர்கள் அவருடைய வர்ணனை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.ஜடேஜாவை தொடர்ந்து சஞ்சய் மஞ்ரேக்கரை வச்சு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்!! 2

வர்ணனை என்ற பெயரில் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை வார்த்தைகளாக மஞ்சரேகர் வீசி வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஐபிஎல் தொடரிலும் மஞ்சரேகர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தோனி மீது வெறுப்பு வார்த்தைகளை வீசி தோனி ரசிகர்கள் இடையே சமூக வலைதளங்களில் சிக்கலுக்கு உள்ளானார்.

 

 

இந்நிலையில் சில நாட்களாக ரசிகர்கள் பலர் பிசிசிஐ மற்றும் ஐசிசி க்கு மஞ்சரேகரை வர்ணனையாளர் இடத்தில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா மஞ்சரேக்கரை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். ஜடேஜாவை அணியில் சேர்ப்பது குறித்து பேசிய மஞ்சரேக்கர், ஜடேஜாவை ”துண்டு துக்கடா வீரர்” என குறிப்பிட்டார். மேலும் தான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்கமாட்டேன் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஜடேஜா, ”நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் இரண்டு மடங்கு நான் விளையாடி விட்டேன். இன்னமும் விளையாடி வருகிறேன்

சாதனை செய்தவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களது ‘வாய்மொழி வயிற்றுப்போக்கு’ போதும். நிறுத்துங்கள்” என கடுமையாக சாடியுள்ளார்.

 

 

இந்த நிலையை வைத்து தனது வர்ணனையில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் கிண்டல் அடித்துள்ளார் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணையாளரும் நடிகருமான ஆர்ஜே பாலாஜி. நேற்றைய ஆட்டத்தில் வர்ணனை செய்த ஆர்ஜே பாலாஜி, சஞ்சர் மஞ்ச்ரேக்கரின் நிலை குறித்துக் கிண்டலாகக் கூறியதாவது:

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலைத் திடீரென பலர் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் எங்கள் வீட்டுக்கு மூட்டை மூட்டையாப் பணம் வந்துள்ளது. எல்லாவற்றுக்கும் காரணம், சஞ்சய் மஞ்ச்ரேக்கர். இந்த கோட் வாங்கினது, வாட்ச் கட்டியிருப்பது, பேண்ட், ஷூ எல்லாம் போட்டிருப்பதற்குக் காரணம், உங்களுடைய வர்ணனையால் தான். குஜராத்தில் கூட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலுக்குச் சந்தாதாரர்கள் அதிகமாக உள்ளார்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கரைக் கிண்டல் அடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *