முதல் வெற்றியை பெறுமா ஆப்கன்: கடினமான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம் 1

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடக்கும் இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான்-பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் தாவ்லத் மற்றும் ஷென்வாரி சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல பங்களாதேஷ் அணியில் சைஃபூதீன் மற்றும் மோசாதேக் ஹூசேன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

பங்களாதேஷ் அணி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 2-ல் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. ஒன்றில் முடிவில்லை. 5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி, அடுத்து மோதும் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும். அதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற போராடும். ஆப்கான் அணி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில், சுழலில் மிரட்டி இருப்பதால் பங்களாதேஷ் அணிக்கும் கடும் நெருக்கடி கொடுப்பார்கள்.

முதல் வெற்றியை பெறுமா ஆப்கன்: கடினமான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம் 2
SOUTHAMPTON, ENGLAND – JUNE 24: Mushfiqur Rahim of Bangladesh plays a shot as Ikram Ali Khil of Afghanistan looks on during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Bangladesh and Afghanistan at The Ageas Bowl on June 24, 2019 in Southampton, England. (Photo by Christopher Lee-IDI/IDI via Getty Images)

 

இந்த உலகக் கோப்பையில், ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசியில் இருக்கிறது ஆப்கான் அணி. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி கணக்கை தொடங்க அந்த அணி, கடுமையாக போராடும். இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானின் அரையிறுதி கனவு எப்போதோ முடிந்துவிட்டது. இந்த இரு அணிகளும் இதுவரை 7 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 4 இல் பங்களாதேஷூம் 3 போட்டியில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

தாஸ் 16 ரன்னிலும், தமிம இக்பால் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசனும், முஷ்பிகுர் ரஹிமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷாகிப் அல் ஹசன் 51 ரன்களும், ரஹிம் 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மொசாடெக் ஹொசைன் 24 பந்தில் 35 ரன்களும், மெஹ்முதுல்லா 38 பந்தில் 27 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்துள்ளது.

முதல் வெற்றியை பெறுமா ஆப்கன்: கடினமான இலக்கை நிர்ணயித்த வங்கதேசம் 3
Bangladesh’s Mosaddek Hossain plays a shot to the boundary during the 2019 Cricket World Cup group stage match between Bangladesh and Afghanistan at the Rose Bowl in Southampton, southern England, on June 24, 2019. (Photo by Adrian DENNIS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE (Photo credit should read ADRIAN DENNIS/AFP/Getty Images)

ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டும், குல்பதின் நைப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 263 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *