இலங்கைக்கு எதிராக தோல்வி தழுவி அரையிறுதி வாய்ப்பையும் நழுவ விட்டு விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு உத்வெகமூட்டக்கூடிய செய்தியாக அந்த அணியின் ஜேசன் ராய் உடற்தகுதி பெற்று விட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஜூன் 14ம் தேதி மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய்க்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. இந்நிலையில் திங்களன்று எடுக்கப்பட்ட 2வது ஸ்கேனில் காயம் நன்றாக குணமடைந்திருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ஜூன் 30ம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆடும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்! 1
“With four days of rehabilitation, he is hopeful of being fit. If it is a big risk we will play it as it is,” Morgan told official broadcaster Sky Sports in the post-match presentation.

ஆனால் நாளை (செவ்வாய்) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜேசன் ராய் ஆட மாட்டார். ஆனால் இன்று காலை வலைப்பயிற்சியில் அவர் பேட் செய்தார். அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார், கடைசி 2 குரூப் ஸ்டேஜ் போட்டிகளில் அவர் ஆடுவார் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணி தன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள தங்களது கடைசி 3 ஆட்டங்களில் குறைந்தது 1 ஆட்டத்திலாவது வெல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் வரும் முக்கிய இங்கிலாந்து வீரர்! 2
England led by Eoin Morgan will want Jason Roy to feature in that must-win clash at Edgbaston as one more defeat can make things tough for the top-ranked of making it to the playoffs.

ஜேசன் ராய் தன் கடைசி 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 5 முறை அரைசதம் கடந்துள்ளார்.   சமீபத்திய 8 போட்டிகளில் 3 முறை சதமும் எடுத்துள்ளார் ராய்.

மேலும் நடப்பு உலகக்கோப்பையில் டேவிட் வார்னருக்கு அடுத்த படியாக தனிநபர் அதிக ஸ்கோரை எடுத்தவர் ஜேசன் ராய். வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்களை இவர் விளாசினார்.

இவருக்குப் பதிலாக தொடக்க வீரராகக் களமிறங்கும் ஜேம்ஸ் வின்ஸ் கடுமையாக சொதப்பி வருவதால் இங்கிலாந்து அணி அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராயை வெகுவாக எதிர்நோக்கியுள்ளது. • SHARE

  விவரம் காண

  வெறும் 7 ரன்னில் ஆல் அவுட்..! 754 ரன் வித்யாசத்தில் வெற்றி! மும்பை பள்ளி உலக சாதனை!

  ஹாரிஸ் ஷீல்டுக்கான பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் ஒரு போட்டியில் சுவாமி விவேகானந்தா இண்டர்நேஷனல் பள்ளியும், குழந்தைகள்...

  சச்சினை போன்று பாஸ்கிதான் அணியில் அறிமுகம் ஆகும் இளம் வீரர்!

  பாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் ஷா என்ற 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட்...

  மீண்டும் வரும் தல தோனி: இன்று அணி அறிவிப்பு! ரசிகர்கள் ஜாலி!

  டிசம்பர் மாதம் நடக்க உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால் அந்தத் தொடர்...

  பகலிரவு டெஸ்ட் போட்டியை காண இவர்களெல்லாம் வருகிறார்கள்: கங்குலி அறிவிப்பு

  மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தைக் காண இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், கபில்...

  பிங்க் பந்து டெஸ்ட் போட்டி: பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்ட புதிய செய்தி

  கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தன. இந்தியா - வங்காளதேசம்...