தென்னாப்பிரிக்க வீரர் லான்ஸ் குளுஸ்னரைப் போல் அதிரடியாக ஆடுகிறார் ஹார்திக் பாண்டியா என ஜாம்பவான் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 27 பந்துகளில் 48 ரன்களை விளாசி, வெற்றிக்கு வித்திட்டார் ஆல்ரவுண்டர் பாண்டியா. இந்நிலையில் அவரது ஆட்டத்தை, கடந்த 1999 உலகக் கோப்பையில் குளுஸ்னர் ஆட்டத்துடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் வாக்.

அவர் ஐசிசி அதிகாரபூர்வ இணையத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பாண்டியாவின் அதிரடி ஆட்டம், எதிரணிகளுக்கு முதுகெலும்பில் அச்சத்தை ஏற்படுத்தும். ஒரு இன்னிங்ஸை தொடங்கி, அதிரடியாக முடிப்பதை பாண்டியா அறிவார். அவரது ஷாட்களை தடுக்க எந்த வீரராலும் முடியாது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 1999-இல் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில், குளுஸ்னர் ஸ்ட்ரைக் ரேட் 122.17 உடன் மொத்தம் 281 ரன்களை விளாசினார். அரையிறுதில் எதிர்பாராத வகையில் ஆஸி.யிடம் தோல்வியுற்றது தென்னாப்பிரிக்கா.

India’s Hardik Pandya bats during the fourth one-day international cricket match between New Zealand and India at Seddon Park in Hamilton on January 31, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

தோனிக்கும் பாராட்டு: 14பந்துகளில் 27 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் 350-ஐ எட்ட உதவினார் தோனி. தேவையான நேரத்தில் அவர் அபாரமாக ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்தியாவுடன் தோல்வி கண்டாலும், ஆஸி. அணி கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும். பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசைகளில் தேவையான மாற்றங்களை செய்து ஆஸி. தனது இருப்பை வெளிப்படுத்தும் என்றார் வாக்.

இந்நிலையில், இந்தியாவின் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவன் கை பெருவிரல் காயத்தால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்லது. இது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவாக அமைந்துள்ளது.
ஒருநாள் ஆட்டங்களில் ரோஹித் சர்மா-தவன் இணை இந்தியாவின் பல வெற்றிகளுக்கு வித்திட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவன் அபாரமாக ஆடி 16 பவுண்டரியுடன் 117 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

India’s Hardik Pandya fields off his own bowling during the third one day international cricket match between New Zealand and India at Bay Oval in Mount Maunganui on January 28, 2019. (Photo by MICHAEL BRADLEY / AFP) / — IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE — (Photo credit should read MICHAEL BRADLEY/AFP/Getty Images)

சிறந்த பார்மில் உள்ள தவனுக்கு ஆஸி. பவுலர் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தால் இடதுகை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. எனினும் அதைப் பொறுத்துக் கொண்டு தவன் ஆட முயன்றார். இதையடுத்து அவருககு லீட்ஸில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. ஆஸி.க்கு எதிராக பீல்டிங் செய்ய தவன் வரவில்லை. இதனால் அவரால் அடுத்த 2 ஆட்டங்களுக்கு ஆட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஷிகர் தவன் ஆட முடியாதது, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். அவருக்கு மாற்று ஆட்டக்காரரை அணி நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை. முழுமையான சோதனை முடிவுகள் வெளிவந்தால் தான் இதுகுறித்து அணியுடன் சென்றுள்ள தேர்வாளர்கள் எம்எஸ்கே. பிரசாத், தேவங்க்காந்தி, சரண்தீப் சிங் முடிவெடுப்பர் எனத் தெரிகிறது. • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...